ADDED : அக் 27, 2023 11:20 AM
அறிஞர் ஒருவர் ஊர் வழியாக சென்றார். அங்குள்ள மக்கள் சந்தோஷத்தில் முழ்கி இருந்தனர். அங்குள்ள பெரியவர் ஒருவரிடம் காரணம் கேட்டார். இங்கு வாழும் செல்வந்தருக்கு ஆண்குழந்தை பிறந்தால் சொத்தில் பாதியை எங்களுக்கு தருவதாக சொன்னார். அதனைப் பெற்ற நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றனர். பல வருடம் கழித்து அவ்வூர் வழியாக மீண்டும் வந்தார் அறிஞர். அப்போது மக்கள் எல்லாம் சோகமாக அமர்ந்திருந்தனர். காரணம் கேட்டார். செல்வந்தரின் மகன் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவு ஆகி விட்டான். அதற்கு பதிலாக செல்வந்தரை சிறையில் அடைத்துள்ளது நிர்வாகம் என்றனர் ஊர் மக்கள். அப்படிப்பட்டவருக்கா இப்படியொரு மகன் என நினைத்துக் கொண்டார் அறிஞர்.