ADDED : அக் 27, 2023 11:20 AM
ஒரு வியாபாரி தன் மகனிடம் சந்தைக்கு போய் பன்றிக்குட்டி வாங்கி வரச் சொன்னார். அவன் வரும் வழியில் சிறுவர்கள் சிலர் விளையாடுவதை வேடிக்கை பார்த்து நின்றான். அப்போது குறும்புக்கார சிறுவன் பையில் இருந்த பன்றியை எடுத்து விட்டு நாய்க்குட்டியை போட்டு விட்டான். தந்தையிடம் பையை கொடுக்க அவனுக்கு திட்டு விழுந்தது. தவறாக கொடுத்துள்ளீர்கள் என்பதை தெரியப்படுத்த பன்றிக்குட்டி பையை வாங்கிச் சென்றான். வழியில் சிறுவர்கள் நாய்குட்டியை எடுத்து விட்டு பன்றிக்குட்டியை இட்டு வைத்தனர். கடைக்காரர் அவனை திட்டி அனுப்பினார். சரியாகத்தானே இருக்கிறது என நினைத்து கொண்டு வந்தவன் சிறுவர்கள் விளையாடுவதை மீண்டும் வேடிக்கை பார்த்தான். முதலில் செய்ததை போல சிறுவர்கள் செய்ய மீண்டும் தந்தையிடம் அவனுக்கு திட்டுடன் கூடிய உதை விழுந்தது. எந்த வேலையை செய்தாலும் கவனத்தோடும் விழிப்போடும் செய்யுங்கள்.