Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/மேலானதை சிந்தியுங்கள்

மேலானதை சிந்தியுங்கள்

மேலானதை சிந்தியுங்கள்

மேலானதை சிந்தியுங்கள்

ADDED : நவ 03, 2023 11:48 AM


Google News
ஒரு பள்ளியில் கணக்கு தேர்வு முடிந்து விடைத்தாள் வழங்கப்பட்டது. ஒரு மாணவன் பேப்பரை வாங்கியவுடன் அழ ஆரம்பித்தான். “ஏன் அழுகிறாய். நீதான் கணக்கில் 96 மார்க் வாங்கி இருக்கிறாயே! சந்தோஷப்படேன்,” என்றார்கள் மற்ற மாணவர்கள்.

“எனக்கு மேலே நான்கு பேர் 97,98,99,100 என வாங்கி விட்டார்களே” என வருத்தப்பட்டான் அவன்.

இன்னொரு மாணவன் சிரித்துக்கொண்டிருந்தான். அவனிடம், “டேய்! நீ வாங்கியிருப்பதே நாலு மார்க். இதில் என்னடா சிரிப்பு?” என்றனர்.

“அட போங்கடா! எனக்கும் கீழே 3, 2, 1, 0 என நான்கு பேர் மார்க் வாங்கியிருக்கிறார்களே. அவர்களை விட நான் உசத்தி தான். என நினைத்தேன். சிரித்தேன்,” என்றான்.

எந்த செயலாக இருந்தாலும், மேலான விஷயங்கள் பற்றி சிந்தியுங்கள். எப்போதும் புத்தி தலைகீழாக சிந்திக்கக்கூடாது. முன்னேற்றம் குறித்தே சிந்திக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us