Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/உடலும் மனமும் இப்படித்தான்

உடலும் மனமும் இப்படித்தான்

உடலும் மனமும் இப்படித்தான்

உடலும் மனமும் இப்படித்தான்

ADDED : நவ 03, 2023 11:51 AM


Google News
ஆபிரகாமிற்கு பல மிருகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம். அதற்கென தனி இடத்தை ஒதுக்கி, வேலியிட்டு, அவற்றைப் பராமரிக்க சில வேலையாட்களையும் நியமித்திருந்தார். தினமும் அங்கே சென்று வருவார். அங்கிருந்த குட்டிக் குரங்கை பார்த்ததுமே அவருக்குப் பிடித்து விட்டது. அதை மட்டும் கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக வளர்க்கும் படி கட்டளையிட்டார். வேலை காரணமாக வெளியூர் சென்ற அவர் ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தார். அவருக்கு பிடித்த குரங்கை எடுத்து வரச் சொன்னார். அதைக் கொண்டு வந்த வேலைக்காரர் அதனை அவர் காலின் கீழ் விட்டு ஒரு குச்சியை எடுத்து முதுகில் ஒரு அடி அடித்தார். குரங்கு வீலென்று அலறியவாறு நடுங்கி நின்றது.

அதை பார்த்ததும் அவர் இப்படியா துன்புறுத்துவாய்? இனிமேல் இப்படி நடந்து கொள்ளாதே என அறிவுரை சொல்லி அதனை தடவிக் கொடுத்தார் ஆபிரகாம். ஏதோ சொல்ல வந்த பணியாளர் பேச்சை காது கொடுத்து கேட்பதாக கூட இல்லை.

அவருக்கு அன்று முழுவதும் அடிபட்ட குரங்கின் முகமே அடிக்கடி நினைவில் வந்தது. அதன் மீது பரிதாபம் ஏற்பட்டது.

மறுநாளும் அங்கு சென்றார். பணியாளரிடம் குரங்கை எடுத்து வரச் சொன்னார்.

இந்த முறை அது அவரை மெதுவாகத் தொட்டுப் பார்த்தது. அவருக்கு சந்தோஷம். மறுநாள் வந்தபோது அவரது இடுப்பில் ஏறி அமர்ந்தது. அதையும் ரசித்தார். அடுத்த நாள் அதன் அருகே சென்ற போது நேராக

அவர் தலையில் ஏறியது. அவரது தலையில் இருந்த தொப்பியை எடுத்து வீசிவிட்டு

அவரது தலைமுடியைப் பிடித்து இழுத்து பேன் பார்க்க ஆரம்பித்தது அதனுடைய செயல் தாங்க முடியாமல் அலறினார். பணியாளர் ஓடிவந்து அதற்கு ஒரு அடி கொடுத்தார்.

அது அலறிய படியே கீழே இறங்கி அடக்கமாய் நின்றது. பணியாளர் சொன்னார், ஐயா குரங்கை இப்படி வளர்த்தால் தான் அது இருக்கும் இடத்தில் இருக்கும். இந்த உடலும் மனமும் இப்படித் தான் ஜெபம், வசனத்தினால் அவ்வப்போது அடி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் அது நம்மை பல இடங்களில் அவமானப் படுத்தி கொண்டே இருக்கும் என்றார் பணியாளர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us