ADDED : மார் 27, 2021 04:10 PM

இயேசுவுக்கு முன்பே வாழ்ந்தவர் ஆபிரகாம். அவரது வீட்டுக்கு வழிப்போக்கன் ஒருவன் பசியுடன் வந்தான். ஆபிரகாம் அவனுக்கு உணவளித்தார். உணவை ஆசையுடன் சாப்பிட உட்கார்ந்தான். அதைக் கண்டதும், ''ஏ முட்டாளே! சாப்பிடும் முன் இந்த உணவை அளித்த ஆண்டவருக்கு நன்றி சொல்லாமல் இருக்கிறாயே?''என கோபத்தில் விரட்டினார்.
''ஆபிரகாமே! இப்படி செய்யலாமா? உன்னால் துரத்தப்பட்ட இவன் எழுபதாண்டுகளாக இப்படித்தான் செய்கிறான். ஆனாலும் திருந்துவான் என பொறுமையுடன் நான் இருக்கிறேன். நீயோ அவனைப் பார்த்த முதல் நாளிலேயே விரட்டி விட்டாயே. என்னைப் பொறுத்தவரை நல்லவர், தீயவர்களுக்கு ஒரே சூரியன் மூலம் ஒளி தருகிறேன். நீயும் சமநிலையுடன் நடந்து கொள்'' என்றார் ஆண்டவர்.