ADDED : மார் 27, 2021 04:06 PM

ஜெர்மனி பிளவுபட்டிருந்த காலத்தில் பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து சுவரைத் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினர்.
மேற்கு பெர்லின் மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் விரும்பவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள், மளிகை சாமான்களை கொண்டு வந்து கிழக்கு பெர்லினின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.
''ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைத் தானே கொடுப்பார்கள்'' எவ்வளவு நிதர்சனமான உண்மை...
உங்களிடம் என்ன இருக்கிறதோ அதைத் தானே நீங்கள் கொடுக்க முடியும்.
அன்பை விதைப்போம்! அன்பை அறுவடை செய்வோம்!