Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/கேட்காமல் கொடு

கேட்காமல் கொடு

கேட்காமல் கொடு

கேட்காமல் கொடு

ADDED : ஜூன் 14, 2024 01:05 PM


Google News
Latest Tamil News
அதிகாலை நேரம். வேலைக்கு புதிதாக சேர்ந்த மாஸ்டர் ஜான் டீக்கடையில் இருந்தார். அவர் எதிரில் பெரியவர் ஒருவர் கை நீட்டினார். மாஸ்டருக்கு ஏதும் புரியவில்லை.

பின்புறமாக நின்றிருந்த முதலாளி, அந்த பெரியவருக்கு கொஞ்சம் சீனி கொடுத்தார். அதை வாயில் இட்ட படியே நடையை கட்டினார் பெரியவர்.

'டேய் ஜான்... இங்கு வாக்கிங் போறவங்க நிறைய பேர் இருப்பாங்க. அதில் பலர் சுகர் பேஷண்ட். அவங்களுக்கு சுகர் குறைவாக இருக்கலாம். பேசக் கூட முடியாம அவசரமா நிப்பாங்க. மயங்க விட வாய்ப்புண்டு. அதனால சட்டுன்னு சீனியைக் கொடுக்கணும். புரிஞ்சதா'' என்றார் முதலாளி.

அங்கு டீ குடித்தபடி நின்ற மருத்துவர் ஒருவர், 'இந்த டீக்கடையும் மறைமுகமாக முதலுதவி மையமாக இருக்கே' என பெருமிதம் கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us