சிறுமி ஜெரினா தன் தாய் மேரியிடம், '' உன் கையில் ஏன் அங்கங்கே வெள்ளையாக இருக்கிறது. எனக்கு இது பிடிக்கவில்லை'' என்றாள். ''நாம் குடிசையில் முன்பு இருந்த போது ஒருநாள் தீப்பற்றியது. தொட்டிலில் உறங்கிய உன்னை துாக்கிக் கொண்டு ஓடிய போது தீப்பொறி கையில் விழுந்தது'' என்றாள்.
இதைக் கேட்ட அவள் அமைதியாக பள்ளிக்குச் சென்றாள். அன்று ஆசிரியர் பாடம் நடத்தும் போது, 'அழகு என்பது வெளியில் இல்லை. நம் மனதில் தான் இருக்கிறது' என்றார்.
இதைக் கேட்ட சிறுமிக்கு அழுகை பீறிட்டது. வீட்டுக்கு வந்ததும் தாயைக் கட்டிக் கொண்டு, '' உலகிலேயே நீ தான் பேரழகி'' எனச் சொல்லி முத்தமிட்டாள்.