மன்னர் நகர்வலம் வந்த போது பிச்சைக்காரன் ஒருவன் எதிரில் வந்தான். முகம் சுழித்தார் மன்னர்.
'என் பாத்திரம் நிறைய பிச்சையிடுங்கள். வழிவிடுகிறேன்' என்றான் அவன். ' இதோ வாங்கிக் கொள்' என ஒரு நாணய முடிப்பை அவனது பிச்சை பாத்திரத்தில் எறிந்தார். அப்படியே அது விழுங்கியது. பின்னர் தன்னிடம் இருந்த பொன்னை எல்லாம் பாத்திரத்தில் இட்டார். அப்போதும் நிரம்பவில்லை. 'கேவலம் இந்த பிச்சை பாத்திரத்தைக் கூட உங்களால் நிரப்ப முடியவில்லை' என சிரித்தான்
பிச்சைக்காரன். பின்னர் அவனிடம், பாத்திரம் பற்றி விசாரித்த போது 'பேராசை கொண்ட மன்னர் ஒருவரின் மண்டை ஓடு இது' என்றான்.
பேராசை கொண்ட மனிதர்களே உண்மையில் பிச்சைக்காரர்கள்.