தாழ்வு மனப்பான்மை கொண்ட சிறுவன் ஜான்சன். கருப்பு நிறமும், தெற்றுப் பல்லும் கொண்ட அவன், தன்னுடன் விளையாட யாரும் வருவதில்லையே எனக் கவலைப்படுவான். ஒருநாள் பலுான் வியாபாரி ஒருவரைக் கண்டான். அவரது கையில் பல நிற பலுான்கள் அசைந்தாடின. 'இந்த பலுான்கள் பறக்குமா?' எனக் கேட்டான். 'பறக்கும்' என்றார் அவர்.
இந்த கருப்பு நிற பலுான் பறக்கும் தானே...' என மீண்டும் கேட்க... சிறுவனின் எண்ணத்தை உணர்ந்த வியாபாரி, 'எந்த நிற பலுானுக்கும் காற்று அவசியம். கலரில் என்ன இருக்கிறது? சிறுவனான உன் மனசு வெள்ளை தான். விளையாட்டு, படிப்பு என கடமையில் கவனம் செலுத்து. எதிர்காலம் சிறக்கும்' என வாழ்த்தியதோடு கூடுதலாக பலுான்களை கொடுத்தார்.