அமெரிக்க பணக்காரரான ராக்பெல்லர் தான் சம்பாதித்த சொத்துக்களை பொதுப்பணிகளுக்கு வாரி வழங்கியவர். இவரிடம், கல்லுாரி கட்டடத்தை விரிவு செய்வதற்கு நன்கொடை பெற வந்தனர் கல்லுாரி மாணவர்கள். அப்போது வியாபார கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்த இவர் விளக்கினை அணைத்து விட்டு அவர்கள் கேட்ட பணத்தை விட கூடுதலாக கொடுத்தார்.
இதை ஆச்சரியத்துடன் பார்த்த மாணவர்களிடம், 'நான் ஒவ்வொரு செயலிலும் சிக்கனத்தை கடைப்பிடித்ததால் தான் நீங்கள் கேட்ட பணத்தை விட என்னால் கூடுதலாக கொடுக்க முடிந்தது' என்றார் ராக்பெல்லர்.
சிக்கனமாக இருங்கள் அதற்காக கஞ்சனாக இருக்காதீர்.