ADDED : ஜன 01, 2025 01:26 PM
தமீமிற்கு அன்று பள்ளி விடுமுறை. குளத்துக்குப் போய் மீன் பிடிக்க வேண்டும் என ஆசைப்பட்டான். இதை அப்பாவிடம் தெரிவிக்கவே சம்மதித்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு புறப்பட நேரத்தில் மழை வேகமாக வந்தது.
'சே. இந்த மழை இப்போன்னு பாத்து பெய்யணுமா' எனக் கோபப்பட்டான் தமீம்.
'தம்பி. இயற்கையைப் பழிக்காதே. அது தன் கடமையைத்தான் செய்கிறது. மீன் இன்னொரு நாள்கூட நாம் பிடிக்கலாமே' என்றார் அப்பா. அவனும் சரி என்று ஏற்றுக் கொண்டான். மதிய நேரத்தில் மழை குறைந்தது. தமீம் மனதில் மகிழ்ச்சி உண்டானது. குளக்கரைக்கு விரைந்தனர். என்ன ஆச்சரியம். கொட்டிய மழையில் வழக்கத்தை விட அதிகமாக கால்வாய்களில் அடித்து வரப்பட்டிருந்தன. 'பார்த்தாயா! மழையால்தான் மீன்கள் அதிகமாக உள்ளன' என்றார். நினைத்தது நடக்காவிட்டால் அதைவிட சிறப்பான ஒன்று நடக்க உள்ளது.