Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/அன்புக்காக...

அன்புக்காக...

அன்புக்காக...

அன்புக்காக...

ADDED : பிப் 20, 2025 08:42 AM


Google News
அது ஒரு குளிர்காலம். ஒரு தந்தையும், ஐந்து வயது மகனும் பஸ்சில் இருந்து இறங்கி சாலையில் நடந்தனர். மரத்தடியில் நின்ற முதிய பெண் ஒருவர் குளிரில் நடுங்கியபடி கையேந்தினாள். அந்த தந்தை சில்லரை காசுகளை மகனிடம் கொடுத்து பிச்சையிடச் சொன்னார். 'பாட்டி' என அழைத்து கையில் கொடுத்தான் சிறுவன்.

சிறிது துாரம் சென்றதும் யாரோ பின் தொடர்வது போல தோன்றியது. திரும்பிப் பார்த்த போது நெருக்கமாக வந்த முதிய பெண் சிரித்தாள். பதட்டத்துடன் மகனை அணைத்துக் கொண்ட தந்தை, 'என்ன வேணும்? ஏன் பின்னாடியே வர்றீங்க?' எனக் கேட்டார். தழுதழுத்த குரலில் , ''இங்க ரொம்ப நாளா பிச்சை எடுக்குறேன். இதுவரை யாரும் அன்புடன் அழைத்ததில்லை. இந்த குழந்தை கூப்பிட்டதும் கண் கலங்கிட்டேன். மன்னிச்சிடுங்க...'' என சொல்லி விட்டு திரும்பினாள்.

இதைக் கேட்ட சிறுவன் மீண்டும் 'பாட்டி' என அன்புடன் கூப்பிட்டான். முதியவள் திரும்பி வரவே, சிறுவன் தன்னிடம் இருந்த உணவு, தண்ணீர் பாட்டிலைக் கொடுத்தான். அன்புக்காக ஏங்குவோர் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் அன்பை பகிருங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us