கணவரை இழந்த நிலையில் தன் மகனை ஆளாக்க பாடுபட்டாள் நான்சி. இதை உணராமல் அவளின் மகன் டேனியல் மற்றவர்களைப் போல தனக்கு பணவசதி இல்லையே என வருந்தினான். நான்சியின் ஆர்வத்தைக் கண்ட நல்லவர் பலர் பொருளுதவி செய்தனர். ஆண்டுகள் பல கடந்தன.
சட்டம் படித்து அரசு வழக்கறிஞர் ஆனான். நோயுற்று படுக்கையில் கிடந்த தாயாரிடம் கல்விக்கு உதவிய நல்லவர்களைப் பற்றி கேட்ட போது கண்ணீர் வந்தது. பின்னாளில் நீதிபதியாகவும் உயர்ந்தான். பதவியேற்ற போது தாயார் பட்ட வேதனையை எண்ணிப் பார்த்தான். 'உன் சரிதம் என் ரத்தத்தால் எழுதப்பட்டது' என்ற பைபிள் வசனம் காதில் ஒலித்தது.