ADDED : பிப் 05, 2025 01:27 PM
இங்கிலாந்தில் இருந்து மியான்மருக்கு (பர்மா) குடியேறினார் பொதுநலவாதி மார்க்ஸ் யங். அங்கு வாழ்ந்த மலைவாழ் மக்களுக்காக நற்செயல்களில் ஈடுபட்டார். ஆனால் யாரும் பொருட்படுத்தவில்லை. ஏன் அவ்வாறு செயல்படுகிறார்கள் என யோசித்தார். அவர்கள் குடிக்க தண்ணீரைத் தேடி அலைகிறார்கள் என அறிந்து ஒதுக்குப்புறத்தில் கிணறு தோண்ட ஆரம்பித்தார். சிரமமாக இருந்தாலும் மனம் தளரவில்லை.
ஒரு நாள் மலைவாழ் மக்களின் தலைவர் தேடி வந்தார், 'ஆண்டவரின் கட்டளை படி நீங்கள் எங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளீர்கள். உங்களை அவமரியாதையுடன் நடத்தியதற்கு மன்னியுங்கள். உங்களின் பெருமையை எங்களுக்கு ஒரு தேவதை சொல்லியது'' என்றார். வேண்டுதல் பலித்தது என மனதிற்குள் நினைத்தபடி ஆண்டவருக்கு யங் நன்றி சொன்னார்.