அன்றாட வேலைகளை செய்ய நேரம் இல்லாமல் தவித்தாள் டெய்சி. இதனால் பள்ளிக்கு அடிக்கடி தாமதமாக வர ஆரம்பித்தாள். அவளுக்கு உண்மையை புரிய வைக்க சோதனை ஒன்றை வைத்தார் அவளின் ஆசிரியை.
நம் பள்ளியிலுள்ள தோட்டத்திற்கு சாக்குப் பையுடன் செல். அதில் சிறியதும் பெரிதுமாக கற்கள், மணலை நிரப்பி வை. சற்று நேரத்தில் அங்கு வருகிறேன்'' என்றார் ஆசிரியை. பையில் மணல், சிறிய கற்களை வேகமாக நிரப்பினாள் டெய்சி. அதனால் பெரிய கற்களுக்கு இடம் இல்லாமல் போனது. என்ன செய்வதென தெரியாமல் விழித்தாள். அங்கு வந்த ஆசிரியை '' பெரிய கற்களை முதலில் நிரப்ப வேண்டும். பிறகே சிறிய கற்கள், மணலை நிரப்ப வேண்டும். ஆனால் நீயோ முதலில் மணல், சிறிய கற்களை நிரப்பியதால் பெரிய கற்களுக்கு இடம் போதவில்லை. இதைப் போலவே அன்றாட வாழ்விலும் நேரமின்றி தவிக்கிறாய்.
பள்ளிக்கு தாமதமாக வருகிறாய். இரவில் சீக்கிரம் துாங்கு. அதிகாலையில் எழுந்திரு. பல் துலக்கி நீராடு. பாடத்தை ஆர்வமுடன் படி. பெற்றோருக்கு உதவி செய். இவை எல்லாம் முக்கியமான வேலைகள் பெரிய கற்களைப் போல. 'டிவி' அலைபேசி பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது, விளையாட்டு போன்றவை பெரிய கற்களுக்கு இடையில் நிரப்பும் மணலைப் போல இடநிரப்பிகள். எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்றார்.