Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

ஆனந்தம் விளையாடும் வீடு

ADDED : டிச 26, 2020 08:22 PM


Google News
Latest Tamil News
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பெற்றோர் சமாதானம் பேசியும் பிரச்னை முடிவுக்கு வராததால் விஷயம் சபையைச் சேர்ந்த போதகரின் கவனத்திற்குச் சென்றது. அவர் இருவரையும் வரவழைத்தார்.

''ஐயா...வீடு, கார், ஆடை, ஆபரணம் என எல்லாம் இவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். ஆனாலும் என்னிடம் விவாகரத்து கேட்கிறாள். இது நியாயமா..'' என வருத்தப்பட்டான் கணவன்.

''சொல்வது எல்லாம் உண்மை தான். எதையும் நான் மறுக்கவில்லை. ஆனால் குடிசையில் கூட வாழத் தயாராக இருக்கிறேன். விலை உயர்ந்த நகைகள், புடவைகள் எனக்கு வேண்டாம். இவரது அன்பும், ஆதரவும் தான் வேண்டும். மனைவி, குழந்தைகள், குடும்பம் என சிந்திக்காமல் மது, மாது என சிற்றின்ப நாட்டமுடன் இருக்கிறார். அதனால் தான் விவாகரத்து வாங்கும் முடிவுக்கு வந்தேன்'' என்று அழுதாள் மனைவி.

போதகருக்கு உண்மை புரிந்தது. இயேசு நம் மீதுள்ள அன்புக்காக உயிரையும் தியாகம் செய்யத் துணிந்தார். நீயும் உன் குடும்பத்தின் மீது அன்பு காட்டு. அப்போது குடும்பம் ஆனந்தம் விளையாடும் வீடாகி விடும்'' என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார். கணவனும், மனைவியும் சமாதானத்துடன் வீட்டுக்கு புறப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us