Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/பல்கலைக்கழகங்கள்/மாணவர் விசா பெறும் முறைகள்: முழுமையான வழிகாட்டி

மாணவர் விசா பெறும் முறைகள்: முழுமையான வழிகாட்டி

மாணவர் விசா பெறும் முறைகள்: முழுமையான வழிகாட்டி

மாணவர் விசா பெறும் முறைகள்: முழுமையான வழிகாட்டி

மே 09, 2025


Google News
Latest Tamil News
வெளிநாடுகளில் உயர்கல்வி தொடர விரும்பும் மாணவர்களுக்கு 'மாணவர் விசா' என்பது முக்கியமான ஒன்று. இதை பெறும் முறை, தேவையான ஆவணங்கள், நேர்காணல் (Interview) மற்றும் முக்கிய குறிப்புகள் (Tips) என அனைத்தையும் இங்கே விரிவாக பார்க்கலாம்.

1. மாணவர் விசா என்றால் என்ன?



மாணவர் விசா என்பது வெளிநாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காக ஒருவருக்கு அந்த நாட்டின் அரசு வழங்கும் அதிகாரப்பூர்வ அனுமதி. இது குறிப்பாக முழு நேர (Full-Time) கல்விக்கான விசா ஆகும்.

2. முதற்கட்ட நடவடிக்கைகள்



கல்வி நிறுவனம் தேர்வு: முதலில் உங்கள் படிப்பு, பிரிவிற்கு ஏற்ற வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை தேர்வு செய்ய வேண்டும். அங்கிருந்து 'அட்மிஷன் லெட்டர்' (Admission letter) பெற்ற பிறகே விசா விண்ணப்பிக்க முடியும். அட்மிஷன் கிடைத்ததும், கல்வி நிறுவனத்திலிருந்து I-20 (USA) அல்லது CAS Letter (UK) போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை பெற வேண்டும். இதில் உங்கள் படிப்பு விவரங்கள், படிப்பு கால அளவு மற்றும் கல்விக் கட்டணம் பற்றிய விவரங்கள் இருக்கும்.

3. விசா விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்



பாஸ்போர்ட் ( செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ அழைப்பு கடிதம். கல்விக் கட்டணம் செலுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள். கல்வி சான்றிதழ்கள் SSLC, HSC, UG Degree என சமீபத்திய கல்வி சான்றிதழ்கள். மொழித் தேர்வு முடிவுகள் TOEFL/ IELTS/ GMAT/ GRE என தேவையான தேர்வின் முடிவுகள். மருத்துவ சான்றிதழ்கள் (சில நாடுகளில் (அமெரிக்கா, ஆஸ்திரேலியா) மருத்துவ பரிசோதனை அவசியம்). விசா விண்ணப்ப படிவம். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்துவமான விண்ணப்ப படிவம் (DS-160 — USA). பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்.

4. தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்ப விசா விண்ணப்ப கட்டணம் மற்றும் நேர்காணல்



அமெரிக்கா--_$185 USD_ நேர்காணல் அவசியம் (Mandatory)

கனடா_ CAD $150 சில சமயம் நேர்காணல்



பிரிட்டன்_ £490 GBP (அதிகரிக்கப்பட்ட சான்றுகள் தேவை)

ஆஸ்திரேலியா_ AUD $710



கட்டணங்கள் எப்போதாவது மாறக்கூடும் — அதிகாரப்பூர்வ தளங்களை பார்க்கவும்.

5. விசா நேர்காணலுக்கான (Interview) முக்கியமான கேள்விகள்

ஏன் அந்த நாட்டில் படிக்க விரும்புகிறீர்கள்?



ஏன் அந்த கல்வி நிறுவனம் தேர்வு செய்தீர்கள்?

உங்கள் படிப்பு முடிந்த பிறகு திட்டம் என்ன?



உங்கள் கல்விக் கட்டணத்திற்கான நிதி ஆதாரம் எது?

உங்கள் குடும்ப நிலைமை பற்றி சொல்லுங்கள்?



6. ஏற்றுக்கொள்ளப்படும் நிதி ஆதார ஆவணங்கள்

வங்கி அறிக்கை (Bank statement) — குறைந்தது 6 மாத அறிக்கை



கல்விக் கடன் (Educational loan sanction letter)

வருமான வரி தாக்கல் விவரம் (Income Tax Returns)



நில சொத்து ஆவணங்கள் (Land/Property documents — சில சமயம் ஆதாரமாக)

உதவித்தொகை (Scholarship sanction letter — இருந்தால்)



7. விசா விண்ணப்பம் செய்யும் நடைமுறை

கல்வி நிறுவனத்தில் அட்மிஷன் உறுதி செய்யவும். விசா விண்ணப்ப படிவத்தை நிரப்பி கட்டணம் செலுத்தவும். தேவையான ஆவணங்களை தயாரிக்கவும். நியமிக்கப்பட்ட தன்னியக்க மையங்களில் (VAC) Biometrics மற்றும் Document submission செய்யவும். நேர்காணல் (அவசியமானால்) சந்திக்கவும். விசா முடிவுக்காக காத்திருக்கவும்.



8. சில முக்கியமான குறிப்புகள் (Tips)

உங்கள் கல்விக்கான நிதி ஆதாரங்களை தெளிவாக தயாரிக்கவும். நேர்காணலுக்கு நேர்த்தியான உடையில் செல்வது நல்லது. ஆவணங்களில் உள்ள தகவல்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். விண்ணப்பத்தை முறையாக மற்றும் தவறில்லாமல் நிரப்ப வேண்டும். முன்பதிவான நேர்காணல் மற்றும் Biometrics தேதிகளை தவறவிட வேண்டாம்.



9. Student Visa வழங்கும் சில முக்கிய நாடுகள் (பிரபலமானவை)

அமெரிக்கா (USA) — F1 Visa



இங்கிலாந்து (UK) — Student Route Visa

கனடா (Canada) — Study Permit



ஆஸ்திரேலியா (Australia) — Subclass 500

சிங்கப்பூர், ஜெர்மனி, நியூசிலாந்து ஆகிய நாடுகளும் மாணவர் விசாவில் முக்கிமானவை.



வெளிநாட்டில் கல்வி தொடர மாணவர் விசா மிக முக்கியமானது. முறையாக ஆவணங்களை தயார் செய்து, துல்லியமாக விண்ணப்பித்து, நேர்காணலில் நம்பிக்கையுடன் பதில் அளிக்க வேண்டும்

அமெரிக்கா (USA)



விசா வகை: F1 Student Visa



தேவையான ஆவணங்கள்: I-20 form (வழங்கும் கல்வி நிறுவனத்திலிருந்து);



SEVIS கட்டணம் (USD $350); DS-160 விண்ணப்ப படிவம்; வங்கி ஆதாரங்கள் ($30,000 - $60,000 — படிப்புக்கு ஏற்ப) TOEFL/IELTS/GRE/GMAT முடிவுகள்; கல்வி சான்றிதழ்கள் (முந்தைய கல்வி); Passport புகைப்படம்



நடைமுறை: SEVIS கட்டணம் செலுத்தவும்; DS-160 form பூர்த்தி செய்து MRV கட்டணம் ($185) செலுத்தவும்; VAC (Biometrics) & US Consulate Interview; விசா முடிவு பொதுவாக 7 முதல் -15 நாட்களில்; CPT/OPT வாய்ப்பு உள்ளது (படிப்பு நேரத்தில்/படிப்பு முடிந்து வேலை அனுமதி).



=====

கனடா (Canada)



விசா வகை: Study Permit



தேவையான ஆவணங்கள்: LOA (Letter of Acceptance); GIC ($20,635 CAD) — நிரந்தர நிதி ஆதாரம்; IELTS/TOEFL முடிவுகள்; கல்வி சான்றிதழ்கள்; வங்கி ஆதாரம்; Passport புகைப்படம்; Medical & Biometrics Report



நடைமுறை: SDS (Student Direct Stream) மூலம் விரைவான விண்ணப்பம் (சில இந்திய மாணவர்களுக்கு); Application fee — CAD $150; Biometrics (VAC); விசா முடிவு — 20 நாட்களில் (SDS வழியாக); Part-time வேலை அனுமதி (20 மணி/வாரம்); Post-Study Work Permit (3 வருடம் வரை)







      Our Apps Available On




      Dinamalar

      Follow us