Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/கோயில்கள்/பிரசித்திப் பெற்று வரும் டெக்ஸாஸ் முருகன் கோயில்

பிரசித்திப் பெற்று வரும் டெக்ஸாஸ் முருகன் கோயில்

பிரசித்திப் பெற்று வரும் டெக்ஸாஸ் முருகன் கோயில்

பிரசித்திப் பெற்று வரும் டெக்ஸாஸ் முருகன் கோயில்

நவ 08, 2024


Google News
Latest Tamil News
நவீனமாய் அறியப்படும் அமெரிக்காவில் ஹிந்து கோயில்களுடன், தமிழக கலாச்சாரமும் வளர்ந்து வருகிறது என்பது ஆச்சர்யமான உண்மை.

அமெரிக்காவில் ஆங்காங்கே இந்து கோயில்கள் உள்ளன. அங்கு விசேஷங்களில் குடும்பத்துடன் சென்று தரிசனம், பூஜை, அர்ச்சனை என எல்லாம் நடக்கிறது.



அதுபோல டெக்ஸாஸ் மாநில தலைநகரான ஆஸ்டினிலும் வெங்கடேஸ்வரா கோயில் முதல் பலதும் உள்ளன.

ஆனால் தமிழ்க் கடவுளான முருகனுக்கும் கோயில் வேண்டும் என்கிற கோரிக்கையில் 2019 - 2020 ல் டெக்ஸாஸ் முருகன் கோயில் ஆரம்பிக்கப்பட்டது.



இதற்காக கும்பகோணத்திலிருந்து தற்போது கதிர் காமர் போன்ற உட்சவர் சிலை வடிவமைக்கப்பட்டு அங்கு நிறுவப்பட்டுள்ளது . கோவில் கட்டுமானம் சிவ சம்பர்தாய கோயிலாகவும் மற்றும் மூலவராக பழனி தண்டாயுதபாணியாகவும் அமைக்க இருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் சர்ச் வளாகத்தில் வாடகைக்கு இடம் பிடித்து உற்சவ சிலை வைக்கப்பட்டு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன.



பிறகு தமிழக தொழிலதிபர் சாம் குமாரின் ஊக்கம் மற்றும் கடனுதவியுடன் சொந்தமாய் இடம் வாங்கி - அங்கு ஷெல்டர் மற்றும் பிராத்தனை கூடம் நிறுவப்பட்டு சிறப்பாக வழிபாடுகள் நடக்கின்றன.

அமெரிக்கா பேச்சு மற்றும் மத சுதந்திரத்திற்கு சட்டத்தில் இடமளிக்கிறது. சட்டப்படி அனுமதி பெற்று கோயில் கட்டும் தீவிரத்தில் இதன் குழு செயல்பட்டு வருகிறது.



முன்பு வாரியார் தன் சொற்பொழிவில் இளைஞர்களையும் கூட வசீகரிப்பார். 'உங்களுக்கு முருகன் என்றும் துணை இருப்பான்!' என்று அவர்களுக்கு உற்சாகம் தருவார்.

அதெல்லாம் மனதில் பதிந்து முருகன் கோயில் உருவாக்கும் ஆர்வம் எழுந்தது என்கிறார் வாரியாரின் உறவினரும் மற்றும் நிறுவன குழு தலைவருமான வெங்கடேசன் பழனிவேலன்.



இக்கோயில் கட்ட நிதி திரட்ட இக்குழு பலவிதத்திலும் முயன்று வருகிறது.சமீபத்தில் கார்த்திக் தேவராஜனின் இசைக்குழுவை இந்தியாவிலிருந்து வரவழைத்து நிகழ்ச்சி நடத்தினார்கள்.

பல சோதனைகளையும் கடந்து முருகன் அருளில் அது வெற்றி பெற்றிருக்கிறது என குழுவினர் மகிழ்கின்றனர்.



இந்தக் கோயிலின் ஆக்கத்திற்கு சாம்குமார் பக்க பலமாக ஒன்பது கோடி ரூபாய் ஏற்கனவே அன்பளித்துள்ளார்.

அத்துடன் அன்றைய நிகழ்ச்சியின் போது பக்தர்கள் தலா 1008 டாலர்கள் கொடுத்தால், தானும் அதே அளவிற்கு நிதி தருகிறேன் என அறிவித்து அங்கு வைத்து ஏறக்குறைய நாற்பது லட்சம் ரூபாய் வசூலாகியிருக்கிறது.



இவரைப் போல கல்விமணி, சாம் கண்ணப்பன், Dr சின்னா நடேசன் போன்றோர் ஆலோசகராகவும் ஆதரவாக உள்ளனர்.

இந்தக் கோயிலில் தமிழிலும் பூஜை,அர்ச்சனைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அவரவருக்கு தோதான மொழிகளில் அர்ச்சனை நடத்தவும் ஏற்பாடு. இதற்காக ஊரிலிருந்து குருக்கள், பூசாரிகள் வரவழைக்கப்பட்டு முறையாய் அனைத்து விசேஷங்களும் நடக்கின்றன.



தைப்பூசம், பங்குனி உத்திரம் , வைகாசி விசாகம், கந்த சஷ்டி மற்றும் ஒவ்வொரு மாத விசேஷ பூஜைகளும் தவறாமல் நடக்கின்றன.

இங்கு வருபவர்கள் அவரவர்களின் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வரும் உணர்வும் திருப்தியும் ஏற்படுகிறது என மகிழ்கின்றனர்.



இதில் இன்னொரு ஆச்சர்ய தகவல். இக் கோயிலுக்கு எங்கிருந்தோ மயில் ஒன்று அவ்வப்போது வந்து சாமியை சுற்றிவிட்டு செல்கிறதாம்.

சொந்த ஊர், சொந்த பந்தங்கள், கோயில்கள் - விசேஷங்கள் என்பதை அறியாத மாணவ மாணவிகள், இளைஞர்களும் இக் கோயிலிற்காக தன்னார்வப் பணியில் ஈடுபடுகிறார்கள் என்பது சிறப்புச் செய்தி.



இந்தத் தலைமுறை மட்டுமின்றி அடுத்த தலைமுறைக்கும் ஆன்மீகம், மற்றும் கலாச்சாரத்தை கொண்டு சேர்க்க இந்த முருகன் கோயிலில் ஒரு அடித்தளமாய் உள்ளது.

TMT நிறுவன குழு: வெங்கடேசன் பழனிவேலன், ஆனந்த் சண்முகவேலு, வேல்முருகன் கலியபெருமாள், அன்புநாதன் பாண்டியன், ரமேஷ் முருகேசன், பாலகிருஷ்ணன் தியாகராஜன், கஜேந்திர பிரசாத் பென்னி செட்டி



EC/Fundraising Committee Members: ராமசந்திரன் பாலகிருஷ்ணன், அசோக்குமார் பாலசுப்ரமணியன், விஜயகுமார் ஜெயபாலு, புருஷோத்தமன் ஆறுமுகம், பிரகதீஸ்வரன் குணசேகரன், சிவகுமார் சம்பந்தம், சிதம்பரம் பெருமாநல்லூர் ராமசந்திரன்

Website: Core Team

Core Team



Super User

- ஆஸ்டின்.R.தினேஷ் with என்.சி.மோகன்தாஸ்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us