/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!
நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!
நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!
நியூஜெர்சியில் உலகப் பெண் கவிஞர் பேரவையின் பன்னூல் வெளியீட்டு விழா!

கவிஞர் விஸ்வசாந்தி எழுதிய “கலர் கோழிக்குஞ்சு” என்னும் சிறார் நூல், கவிஞர் சாந்தி சந்திரசேகர் எழுதிய “பாப்பாவுக்குப் பறவைப் பாட்டு”என்ற பறவைகள் மீதான நூல், கவிஞர் இரம்யா நடராஜன் எழுதிய “வீட்டில் விளையாடலாம் வாங்க” கட்டுரை நூல், கவிஞர் பவளசங்கரி எழுதிய “சிந்தனைத் தாக்கங்கள்” கட்டுரை நூல், முனைவர் வேல்விழி எழுதிய “முதல் மலர் மணம்”, முனைவர் சுவர்ணா முத்துக்கிருஷ்ணன் எழுதிய “கண்ணம்மாவின் மடல்கள்” மற்றும் “என் பெயர் ரங்கநாயகி” என்ற கவிதை நூல்கள் , கவிஞர் மஞ்சு எழுதிய “கன்னம் கிள்ளிப் போனால்” கவிதை நூல், கவிஞர் உமா பால்ராஜ் எழுதிய “எழுதித் தீரா வலி” போர்க்கால மழலையர் நூல், கவிஞர் இராஜி வாஞ்சி எழுதிய “ஏன் விரட்டினீர்கள் எங்களை” பயணக் கவிதை நூல் மற்றும் கவிஞர் மேனகா நரேஷ் மொழிபெயர்த்த கவிஞர் சொல்லாக்கியன் எழுதிய “துளிமொழி” என்ற ஹைக்கூ கவிதை நூலின் ஆங்கில வாக்கம் உள்ளடக்கிய “Wordlet” ஆகிய நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
துளி மொழி என்ற நூலின் ஆங்கிலவாக்கம் குறித்த ஆய்வுரையைக் கவிஞர் கனிமொழி மிகச் சிறப்பாக வழங்கினார். நரேஷ் குமார் வரவேற்புரை வழங்கினார். கவிஞர் மேனகா நரேஷ் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
அயல்நாட்டு மண்ணில் நம் தமிழ்நாட்டுப் பெண்கள் படைத்த நூல்கள் வெளியானது மிகவும் பெருமைக்குரிய நிகழ்வு! ஈரோடு தமிழன்பன் எனும் மகாகவியின் நூல்களை எல்லாம் தொகுத்து, “எரிதழலும் இளங்காற்றும்” எனும் ஒரு பெரும் நூலைப் படைத்து, இமாலய சாதனை நிகழ்த்திய முனைவர் அகன் இந்த நிகழ்வையும் சாத்தியமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது தமிழ்ப்பணி மேன்மேலும் தொடரத் தமிழ்த்தாய் அருள்வாளாக!
- தினமலர் வாசகி மேனகா நரேஷ்