Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/அமெரிக்காவில் டிவி வரதராஜனின் எல் கே ஜி ஆசை நாடகம்

அமெரிக்காவில் டிவி வரதராஜனின் எல் கே ஜி ஆசை நாடகம்

அமெரிக்காவில் டிவி வரதராஜனின் எல் கே ஜி ஆசை நாடகம்

அமெரிக்காவில் டிவி வரதராஜனின் எல் கே ஜி ஆசை நாடகம்

ஜூன் 02, 2025


Google News
Latest Tamil News
பிரபல நாடக நடிகர் டிவி வரதராஜன் , வேதம் புதிது கண்ணன் எழுதி தனது யுனைடெட் விஷுவல்ஸ் குழு மேடையேற்றி ஆரவாரமான வரவேற்பை பெற்றுவரும் 'எல் கே ஜி ஆசை' நாடகத்தை அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் மேடையேற்றுவதற்காக இரண்டு மாத பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

தனது குழுவின் மூன்று கலைஞர்கள் லஷ்மி, சங்கர் குமார், கிரீஷ் ஆகியோருடன் பயணிக்கும் வரதராஜன் அந்தந்த நகரங்களில் உள்ள எட்டு கலைஞர்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களுடன் இணைந்து எல் கே ஜி ஆசையை மேடையேற்றுவது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது



இதுவரை ந்யூ ஜெர்சி, இண்டியானா போலீஸ், மேடிசன், சிகாகோ, மில்வாக்கி போன்ற நகரங்களில் மேடையேற்றி அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பை பெற்றுள்ள் இக்குழுவினர், ஞாயிற்றுக்கிழமை (31.5.2025) அன்று சார்லெட் தமிழ்ச் சங்கத்தில், தங்களது ஆறாவது காட்சியை மேடையேற்றி அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பைப் பெற்றனர்.

சார்லெட் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தலைவர் ரூபன், துணைத்தலைவர் ஆனந்த், செயலாளர் அஷோக், இணைச்செயலாளர் சென்னியப்பன், பொருளாளர் ராகேஷ் திரு டிவி வரதராஜனுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தனர். மிகக்குறுகிய காலத்தில் ஒத்திகையில் பங்கேற்று மிகச்சிறப்பாக நடித்த உள்ளூர் கலைஞர்களை டிவி வரதராஜனும், அவரது குழுவினரும் மேடையில் கெளரவித்து பாராட்டினார்கள்.



தொடர்ந்து ஜூன் 14 சான் அண்டோனியாவிலும், ஜூன் 15 ஹூஸ்டனில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய அரங்கிலும் எல்கேஜி ஆசை நாடகம் மேடையேறவிருக்கிறது. ஜூன் 21, 2025 அன்று கலிபோர்னியாவில் உள்ள ஹேவார்டில் எல்கேஜி ஆசை நாடகத்தை மேடையேற்றி தங்களது அமெரிக்க கலைப் பயணத்தை நிறைவு செய்து, டிவி வரதராஜன் குழுவினர் ஜூன் 25 அன்று சென்னை திரும்புகிறார்கள்.

இக்குழுவின் பயணத்திற்கான ஏற்பாடுகளை சிகாகோ ரங்கா மற்றும் ஹூஸ்டன் கணேஷ் ஒருங்கிணைத்து செய்திருக்கிறார்கள்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us