Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/“Data Analysis for Everyone” - உலகம் முழுவதும் வெளியீடு!

“Data Analysis for Everyone” - உலகம் முழுவதும் வெளியீடு!

“Data Analysis for Everyone” - உலகம் முழுவதும் வெளியீடு!

“Data Analysis for Everyone” - உலகம் முழுவதும் வெளியீடு!

ஆக 01, 2025


Google News
Latest Tamil News

தகவல் தொழில்நுட்பம், கணினி தரவுத்துறை பின்புலம் இல்லாதவர்கள் கூட தரவுலகிற்குள் (Data) நுழைந்து, தரவியல் அறிவியலுக்கு தங்களைத் தயார் படுத்த வழிகாட்டும் முயற்சியாக, எழுத்தாளர் புதுவை முருகு (முருகு வைத்தியநாதன்) எழுதிய “Data Analysis for Everyone” என்ற தரவு அடிப்படை நூல் தற்போது வெளியாகியுள்ளது.



இந்நூல் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட BitLit Publishing மூலம் வெளியிடப்பட்டு, உலகளாவிய விநியோகத் தளமான IngramSpark மூலம் பன்னாட்டு வாசகர்களை நோக்கி விநியோகிக்கப்படுகிறது.



தற்போது இந்நூல் அமேசான் (அனைத்துலக), Barnes & Noble, Books-A-Million, Bookshop Org, கனடாவின் Indigo, இங்கிலாந்தின் Waterstones, Blackwell's, WHSmith, Hive UK, ஐர்லாந்தின் Eason & Son, ஸ்காண்டினேவியாவின் Adlibris, Bokus, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் Booktopia, Fishpond உள்ளிட்ட முன்னணி விற்பனை தளங்களில் கிடைக்கிறது.



மேலும், IngramSpark பன்னாட்டு கூட்டு விநியோகம் மூலமாக 55,000க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள், பள்ளிகள், நூலகங்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள் மூலமும் நூல் விற்கப்படுகிறது.



புத்தக விவரங்கள்:



Data Analysis for Everyone



எழுத்தாளர்: புதுவை முருகு



அச்சுப் புத்தக ISBN: 979-8-9909905-7-9



மின்புத்தகம் (ePub) ISBN: 979-8-9909905-8-6



இந்நூலை வாங்க:



Paperback (அச்சு வடிவம்):



https://www.amazon.com/Data-Analysis-Everyone-Turning-Insights/dp/B0FK6YG1QH



Kindle (ePub வடிவம்):



(தற்காலிகமாக மிகக் குறைந்த விலையில்)



https://www.amazon.com/DATA-ANALYSIS-EVERYONE-Turning-Insights-ebook/dp/B0FJPSKSW2



அனைவரும் புரிந்து கொள்ளும் மொழியில் தரவியல் அடிப்படைகள் மற்றும் தொழில்நுட்பம் சாராத மக்களுக்கும் புரியும் எளிய எடுத்துக்காட்டுகள் மூலம் அமைந்துள்ள இந்த நூல், ஒவ்வொருவரும் “தரவு” Data என்னும் துறையில் பயணத்தைத் தொடங்க ஒரு சிறந்த முயற்சியாகும். தரவு பற்றி அறிந்து கொள்வதற்கான முதலெழுத்தாகும் இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.



- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us