சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் 2025ம் ஆண்டு பொங்கல் திருவிழாவை, “உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”என்ற பாரதியின் வரிகளின்படி இயற்கையைப் போற்றவும், உழவர் பெருமக்களை வாழ்த்தவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்று கூடி இத்திருநாளை மிக விமர்சையாக கொண்டாடினர்.
பொங்கல் பானை வைத்தல், கோலப்போட்டி, பாரம்பரிய உடை போட்டி, பறை இசை, உறி அடித்தல், சிறுவர்களுக்கான விளையாட்டுகள், வாழை இலை விருந்து, திருக்குறள், பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு பரிசு அளிப்பு, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் ஜேசு சுந்தரமாறனின் பட்டிமன்றம், சிறப்பு விருந்தினராக வருகை தந்த அசார், சுட்டி ஆனந்த்தின் நகைச்சுவை மற்றும் சுஜாதா, செந்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தமிழர் பண்பாட்டு உணர்வோடு திரண்டு வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். தமிழ் குடும்பங்கள் மட்டும் அல்லாமல் பிற மொழி பேசுபவர்களும் இந்நிகழ்ச்சியை ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
சாக்ரமெண்டோ தமிழ் மன்றம் தன்னார்வலர்களால் நடத்தப்படுகிற நிறுவனம் ஆகும். இதில் பங்கேற்ற அனைத்து குடும்பங்களுக்கும், தமிழ் பள்ளிகளுக்கும் சாக்ரமென்டோ தமிழ் மன்றம் தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
- தினமலர் வாசகி சந்தியா நவீன்