Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/சாக்லெட் விலை அதிகமில்லை ஜென்டில்மேன்…. Just ஒரு கோடி ரூபாய்தான்!

சாக்லெட் விலை அதிகமில்லை ஜென்டில்மேன்…. Just ஒரு கோடி ரூபாய்தான்!

சாக்லெட் விலை அதிகமில்லை ஜென்டில்மேன்…. Just ஒரு கோடி ரூபாய்தான்!

சாக்லெட் விலை அதிகமில்லை ஜென்டில்மேன்…. Just ஒரு கோடி ரூபாய்தான்!

நவ 19, 2024


Google News
Latest Tamil News
அமெரிக்காவில் பலதும் அட்டகாசமாய் நடப்பதுண்டு. நடந்து அட்டகாசமும் செய்வதுண்டு.

அங்கு உள்ள சாக்லேட் தொழிற்சாலைகளை பொதுமக்களும் பார்வையிட அனுமதிக்கிறார்கள். சென்றால் பார்க்கலாம். ரசிக்கலாம். ருசிக்கலாம். அப்படியே வாங்கவும் செய்யலாம். அவற்றில் எப்போதும் கூட்டம் அள்ளும்.



பென்சில்வேனியா - மாநிலத்தில் பிட்ஸ்பர்க்கில் உள்ள SARRIS CHOCOLATE தொழிற்சாலை மிக பிரபலம்.இதில் சாக்லேட்டுடன் விதவித ஐஸ்கிரீம்களும்!

உலகில் நாம் பார்க்கிற - உபயோகிக்கிற சோப்பு, சீப்பு, (செருப்பு) முதற்கொண்டு அத்தனை போலவும் சாக்லேட்டுகள் தயாரித்து காட்சிப்படுத்துகிறார்கள்.



அதுவும் அமோக விற்பனை!

அத்துடன் அவர்கள் அவ்வப்போது வாடிக்கையாளர்களை ஈர்க்க - ஜிம்கானா ஏதாவது செய்வதுண்டு.



இப்போது--1180 கிலோவில், 12 அடி உயரம், 8 அடி நீளம்,3 அடி அகலம்! இதை 3 மாதத்தில் 8 பேர் கொண்ட குழு தயாரித்துள்ளது!

இதன் விலை ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்கள் ! ( ஒரு கோடிக்கும் மேல் ! )



இதையும் பெருமையுடன் வாங்கிச் செல்ல போட்டாப் போட்டியாம்!

அம்மாடி !



- என்.சி.மோகன்தாஸ் with P.சரவணன்; சாக்லேட் கலவை: வெ.தயாளன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us