/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/அமெரிக்காவில் நியூ ஜெர்சி முத்தமிழ்ப் பள்ளி திறப்பு விழா!!!அமெரிக்காவில் நியூ ஜெர்சி முத்தமிழ்ப் பள்ளி திறப்பு விழா!!!
அமெரிக்காவில் நியூ ஜெர்சி முத்தமிழ்ப் பள்ளி திறப்பு விழா!!!
அமெரிக்காவில் நியூ ஜெர்சி முத்தமிழ்ப் பள்ளி திறப்பு விழா!!!
அமெரிக்காவில் நியூ ஜெர்சி முத்தமிழ்ப் பள்ளி திறப்பு விழா!!!

வடக்கு ஜெர்சி முத்தமிழ் சங்கத்தின் (NJMTS) ஒரு அங்கமாக முத்தமிழ்ப் பள்ளி (https://school.njmts.org/) பார்சிப்பனி மற்றும் சுற்றுவட்டார குழந்தைகளும் மக்களும் பயன்பெற செப்டம்பர்-06-2024 வெள்ளிக்கிழமை அன்று துவங்கப்பட்டது.
முத்தமிழ்ப் பள்ளி துவக்க விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே துவங்கியது.
பார்சிப்பனி நகரில் இருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள Bridgewater வெங்கடேஸ்வரா கோவிலின் கல்விக்குழுத் தலைவர் நர்மதா கிருஷ்ணசாமி மற்றும் Bridgewater தமிழ்ப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் அருண்ராஜ் சந்திரசேகரன் விழாவின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
விருந்தினர்களின் உரை பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரையும் கவரும் வண்ணம் இருந்தது. பள்ளி நிர்வாகிகள் 'தமிழால் நாம்! தமிழராய் நாம்!! தமிழுக்காக நாம்!!!' என்கிற முழக்கத்துடன் வரவேற்புரை வழங்கினர். பள்ளி முதல்வர் துணை முதல்வரையும் ஆசிரியர்களை அவைக்கு அறிமுகப்படுத்தினார். பள்ளி நிர்வாகிகள் விழாவினை நன்கு திட்டமிட்டு சிறப்பாக சிற்றுண்டியுடன் ஏற்பாடு செய்திருந்தனர்.
பள்ளி முதல்வர்: பாக்கியலட்சுமி, பள்ளி துணை முதல்வர்: ரதி தேவி, பள்ளி ஆசிரியர்/தன்னார்வலர்கள் குழு: சிவரஞ்சனி, செளஜன்யா, மைதிலி, சுகுணா, அகிலா, அருஞ்சுனை தினேஷ், சரவணக்குமார், பாக்கீஸ்வரன், வேணுகோபால், ஆனந்த், ரூபன், ருத்விக்
பள்ளி நிறுவனர்கள்: இரமேஷ் குமார், வெங்கடேசன், மதன்பாபு, தனசேகரன், அமரர் இராஜரத்தினம்
முத்தமிழ்ப் பள்ளி (தொடர்பு எண்: +19739833049)
நம் தமிழ் மொழி, பண்பாடு மற்றும் கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுப்பதில் பெரும் வெற்றியடைய நாமும் வாழ்த்துவோம்!!