நியூ ஜெர்சி மாநிலத்தில் பார்சிப்பனி நகரில் செயல்படும் முத்தமிழ்ப் பள்ளியில் ( https://school.njmts.org/ ) கோலாகலமான தீபாவளிக் கொண்டாட்டம். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி பார்சிப்பனி நூலகத்தில் உள்ள அரங்கினில் முத்தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
தீபாவளிக் கொண்டாட்டம் மதிய உணவுடன் இனிதே துவங்கியது. முத்தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மதிய உணவினை NJMTS சங்கம் தாராளமாக வழங்கியது. மதிய உணவிற்குப் பிறகு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க உறுதிமொழியுடன் துவங்கியது.
பள்ளி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தினார். பின்னர் முத்தமிழ்ப் பள்ளி மாணவர்கள் தொகுத்து வழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மேடையில் மாணவர்கள் அரங்கேற்றினர். பாடல், ஆடல் மற்றும் நிகழ்வின் முத்தாய்ப்பாய் வில்லுப்பாடல் கண்களுக்கும் செவிகளுக்கும் நல் விருந்தாய் அமைந்தது.
தீபாவளிக் கொண்டாட்டத்தில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் முத்தமிழ்ப் பள்ளியின் பதக்கம் வழங்கப்பட்டது. துணை முதல்வர் நன்றியுரையுடன் விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்கள், ஊக்கப்படுத்திய ஆசிரியர்கள் ஒத்துழைத்த பெற்றோர்கள், தொழில்நுட்ப உதவி புரிந்த தன்னார்வலர்கள் அனைவருக்கும் இவ்விழா வெற்றி பெற்றதில் பெருமகிழ்ச்சி.
அயல் நாட்டில் இருப்பினும் நம் தாய் மொழியையும் கலாச்சாரத்தையும் காத்திட இது போன்ற விழாக்கள் நடத்தி மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் முத்தமிழ்ப் பள்ளி மென்மேலும் வளர நாமும் வாழ்த்துவோம்.