Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/வட அமெரிக்க முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார கொண்டாட்டங்கள்

வட அமெரிக்க முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார கொண்டாட்டங்கள்

வட அமெரிக்க முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார கொண்டாட்டங்கள்

வட அமெரிக்க முருகன் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார கொண்டாட்டங்கள்

நவ 08, 2024


Google News
Latest Tamil News
வட அமெரிக்கா முருகன் கோவில் மேரிலாந்து வாசிங்டன் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு நவம்பர் 2-ஆம் நாள் சனி முதல் நவம்பர் 7-ஆம் நாள் வியாழன் வரை கந்த சஷ்டி சூரசம்ஹார கொண்டாட்டங்கள் சிறப்பாக நிகழ்த்தப்பட்டன. சுப்பிரமணிய ஹோமம், பால்குடம், காவடி, முருகன் சிறப்பு அபிஷேகம் ஆகியன இந்த ஆறு நாள்களிலும் முக்கியமான நிகழ்வுகளாகும். கந்த சஷ்டியும் சூரசம்ஹாரமும் தமிழர் மரபில் முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விரதம் இருந்து உலகளவில் உள்ள தமிழ் சமூகங்களில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றன.

கந்த சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கும் அசுர சூரபத்மனுக்கும் இடையேயான வீரப்போரின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. இது நன்மை கெட்டதை வெல்வதைக் குறிக்கிறது. பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் போன்ற பாடல்களைப் பாடி, முருகப் பெருமானின் பாதுகாப்பு வரங்களை நாடுகிறார்கள். சூரசம்ஹாரம் அன்று முருகப்பெருமான் சூரபத்மனை அழிக்கிறார். இது போரின் உற்சாகமான நினைவாகவும், தீமையைத் தகர்க்கும் கடவுளின் சக்தியாகவும் காட்டப்படுகிறது. சூரசம்ஹாரம், சூரபத்மன் பிரதிநிதித்துவப்படுத்தும் அகங்காரம், அறியாமை, கெட்ட தன்மைகளை அழிக்க முருகப்பெருமானின் வெற்றியை விளக்குகிறது. இது தீய ஆற்றல்களைக் கட்டுப்படுத்துவதற்கான தெய்வீக நடவடிக்கையாகவே போற்றப்படுகிறது.



வட அமெரிக்கா முருகன் கோவிலில் இந்த நிகழ்வு வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சூரசம்ஹாரம் அன்று போரின் நிகழ்வுகளைச் சித்தரிக்கும் வகையில் கோவில் நிர்வாகம் சடங்குகளைச் சிறப்பாக நடத்தினர். பக்தர்கள் இந்நிகழ்வைக் காணப் பெருமளவில் திரண்டனர். சூரபத்மனின் கொலையை அழகாகச் சித்தரித்து சடங்குகளை நடத்தினர். அமெரிக்காவில் பிறந்து வளரும் தமிழ் சிறுவர்கள் இதனை ஆர்வமாகக் கண்டு களித்து முருகப்பெருமானைப் பற்றிப் பெற்றோர்களிடம் ஆர்வமாகக் கேட்டறிந்து கொண்டனர்.



- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us