/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/அரிசோனாவில் சங்கர் நேத்ராலயா அறக்கட்டளைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி!அரிசோனாவில் சங்கர் நேத்ராலயா அறக்கட்டளைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி!
அரிசோனாவில் சங்கர் நேத்ராலயா அறக்கட்டளைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி!
அரிசோனாவில் சங்கர் நேத்ராலயா அறக்கட்டளைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி!
அரிசோனாவில் சங்கர் நேத்ராலயா அறக்கட்டளைக்கு நிதி திரட்ட இசை நிகழ்ச்சி!

நவம்பர் 3ஆம் தேதி அரிசோனாவிலுள்ள ஃப்னிக்ஸ் பெருநகரில் நிதி
திரட்டுவதற்காக நடத்திய இசை நிகழ்ச்சியைப் பலர் கண்டுகளித்து நன்கொடை
நல்கினர். மொத்தம் $1,20,000 (ஒருகோடி ரூபாய்) நன்கொடை குவிந்தது!
இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மணி சர்மாவின் குழு பல தெலுங்குப்
பாடல்களையும், சில தமிழ்ப்பாடல்களையும் பாடி, நன்கொடையாளர்களை இசை
வெள்ளத்தில் மூழ்கடித்தது.
இந்த இசை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்தேறியதில் சியாம் அப்பாலி, மூர்த்தி
ரேகாபாலி, ஸ்ரீநிவாச குப்தா, தியாகு, வம்சி கிருஷ்ணா, ஆதி மோர்ரெட்டி
ஆகியோருடன் பல தன்னார்வலர்களின் பங்கு குறிப்பிடத் தக்கது.
சங்கர் நேத்ராலாயா பற்றியும், அது இந்தியாவில் எப்படிப் பணியாற்றுகிறது
என்பதைப் பற்றிய காணொளியும் இசை நிகழ்ச்சியின் இடைவேளையில்
நன்கொடையாளர்களுக்குக் காட்டப்பட்டது.
- நமது செய்தியாளர் ஒரு அரிசோனன்