Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/கலிஃபோர்னியா கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி 50 ஆண்டு நிறைவு விழா

கலிஃபோர்னியா கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி 50 ஆண்டு நிறைவு விழா

கலிஃபோர்னியா கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி 50 ஆண்டு நிறைவு விழா

கலிஃபோர்னியா கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி 50 ஆண்டு நிறைவு விழா

ஜூன் 27, 2025


Google News
Latest Tamil News

கலிஃபோர்னியாவில் உள்ள கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளியின் நிறுவனர்கள், இயக்குனர்களான கேத்ரின் குன்ஹிராமன் மற்றும் அவருடைய கணவர் குன்ஹிராமன் 1975 ஆம் ஆண்டு நடனப் பள்ளியை தொடங்கினர்.

குன்ஹிராமன்(லேட்), கலாக்ஷேத்ராவின் கதகளி மற்றும் பரதநாட்டியம் பயிற்றுவிக்கும் கலைஞர் ஆவார். கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. நடனப் பள்ளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயின்று வரும் நிலையில், அதை கொண்டாடும் வகையில் அப்பள்ளியின் ஐம்பது ஆண்டு நிறைவு விழா, கலிஃபோர்னியாவில் உள்ள விரிகுடா-சான்பிரான்சிஸ்கோ பகுதியில் நடைபெற்றது.



இதில் இசை கலைஞர்கள் பி.விஜீஷ் (பாடல்), பாலக்காடு விஷ்வேஷ் சாமிநாதன் (வயலின்), கே.பி ரமேஷ் பாபு(மிருதங்கம்), அகில் அனில்குமார் (புல்லாங்குழல்) , கலாஷேத்ரா கே.பி. யசோதா (நட்டுவாங்கம் ) என அனைவரும் பங்கு பெற்று விழாவை சிறப்பித்தனர். பாரம்பரிய நடனத்துடன் இந்திய கலாச்சாரத்தை மேன்மை படுத்தும் வகையில் இப்பள்ளியில் பயிலும் அனைவரும் இவ்விழாவில் பங்கு பெற்றனர்.



கேத்ரின் குன்ஹிராமன் கலாஷேத்ராவில் பரதம் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது . சென்னையில் உள்ள பரத கலாஞ்சலி நடனப்பள்ளி நிறுவனர் தனஞ்ஜெயன், கேத்ரின் குன்ஹிராமனுடைய நட்டியாச்சாரியாக விளங்கியவர். கலை ஆர்வம் உள்ள மக்கள் தங்கள் குடும்பத்துடன் அலைகடலென திரண்டு வந்து இவ்விழாவை கண்டுகளித்தனர் என்பதை கலாஞ்சலி இந்திய நடனப் பள்ளி மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.



- தினமலர் வாசகி சந்தியா நவீன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us