Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/ஹூஸ்டன் மாநகரில் பாரதி கலை மன்ற ஐம்பதாவது ஆண்டு நிறைவு

ஹூஸ்டன் மாநகரில் பாரதி கலை மன்ற ஐம்பதாவது ஆண்டு நிறைவு

ஹூஸ்டன் மாநகரில் பாரதி கலை மன்ற ஐம்பதாவது ஆண்டு நிறைவு

ஹூஸ்டன் மாநகரில் பாரதி கலை மன்ற ஐம்பதாவது ஆண்டு நிறைவு

செப் 08, 2024


Google News
Latest Tamil News
ஹூஸ்டன் மாநகரில் பாரதி கலை மன்றத்தின் ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா ஆகஸ்ட் 30 மற்றும் செப் 1 இரண்டு நாள் நிகழ்வாக ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் கோலாகலக் கொண்டாடப்பட்டது .

துவக்க நிகழ்ச்சியானா ஜதி பல்லக்கு ஊர்வலம் மீனாட்சி அம்மன் கோவில் வாசலில் இருந்து, தமிழகத்தில் இருந்து வந்த தமிழ் ஆளுமைகளுடன் அணிவகுப்பை பாரதி கலை மன்ற தலைவர் விஜி திரு தொடங்கி வைத்தார் ஊர்வலத்தின் இறுதியில் தமிழ் பாரம்பரிய கலை நிகழிச்சிகள் ஹூஸ்டன் பறைக்குழு தலைவர் மற்றும் பாரதி கலை மன்றத்தின் குழு உறுப்பினர் - தொடர்பு இயக்குனரான தங்கராஜ், வழிகாட்டலில் சிறப்பு விருந்தினர்கள் இந்திய தூதரக அதிகாரி மஞ்சுநாத் , பியர்லாண்ட் மேயர் கேவின் கோல் மற்றும் தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா, ரமணன் , மோகன சுந்தரம் முன்னிலையில் நடை பெற்றன.



ஹூஸ்டனில் முதல் முறையாக துடும்பாட்டம் நடனம் பார்வையாளர்களின் பெரும் ஆதரவோடு ஹூஸ்டன் பறைக்குழவினரால் அரங்கேறியது. புதிய முயற்சியாக கரகமுடன் இணைந்த கோலாட்டம் பறை குழுவின் புனிதா தங்கராஜ் ஆட கூடி இருந்தபார்வையாளர்களின் பெருத்த கரஒலியுடன் நிகழ்ந்தது . மேலும் சிலம்பாட்டம்,மயிலாட்டம், புலியாட்டம் நடனங்களும் நடந்தன .



நிகழிச்சின் இறுதியாக பறை குழுவின் பறை இசை பாரதமாதா , கரக கலைஞர் உடன் இணைந்து பார்த்தோரை மெய்சிலிர்க்க வைத்தது. மகா கவி பாரதிக்கு பிடித்த பறை இசையினை ஹூஸ்டன் பறையிசைக் குழுவினரின் பறை இசையொலிக்க முன்நடத்த பாரத மாதாவும் பாரதியும் சிறுமி சிறுவருக்குள் புகுந்து கொள்ள பொம்மலாட்டப் பாவைகளாய் சிறுமியர் மூவர் சேர்ந்து வர கரகமேந்தி பாரதப் பெண்டிர் கிராமிய மணம் பரப்பி நடனமாட பதின்ம வயது இளம்பெண்கள் வண்ணமேறிய சிலம்பங்களைச் சுழற்றிட வண்ணக்கொடிகள் காற்றில் அசைய மண்ணின் மைந்தர்கள் சூழ ஊர்வலமாய் வர கண்கொள்ளாக் காட்சியாய்காட்சியளித்தது மீனாட்சி வளாகமே.



ஊர்வலத்தில் பாரதியின் பாடலை தமிழறிஞர் தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா , ரமணன் பறையிசையுடன் பாட காண்போரை பரவசமடைய செய்தது. வாழ்த்துரைத்த இந்திய தூதரக அதிகாரி மஞ்சுநாத் பறை இசையும் தமிழ் கலாச்சார நடனங்களும் தன் இளமைக் கால நினைவுகளை ஞாபகப்படுத்தியமைக்காக பறை இசை குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். பியர்லாண்ட் மேயர் கேவின் கோல் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.



- தினமலர் வாசகர் பி.தங்கராஜ்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us