Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை நடத்திய "குழந்தைகள் தின விழா"

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை நடத்திய "குழந்தைகள் தின விழா"

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை நடத்திய "குழந்தைகள் தின விழா"

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை நடத்திய "குழந்தைகள் தின விழா"

டிச 05, 2024


Google News
Latest Tamil News
குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை (KKSF), ஸ்ரீ மீனாட்சி டெம்பிள் சொசைட்டி (MTS ) மற்றும் உயிர் அறக்கட்டளையுடன் சேர்ந்து பியர்லாந்தில் குழந்தைகள் தின விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழ் சமூகத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டு விழாவை மெருகூட்டினர்.

விழாவை KKSF நிறுவனர் மாலா கோபால் வரவேற்றார். நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மருத்துவர் வடுகநாதன் நிகழ்ச்சியை வழிநடத்தினார் . புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, மாலா கோபாலால் சிறப்பித்து கவுரவிக்கப்பட்டனர்.



இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இருந்த ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் ஆய்வுத்துறையின் சிறப்பு விரிவுரையாளர் தங்கவேல் விஜயலக்ஷ்மி, தமிழ் மொழியின் பெருமையும் அதன் கலாசாரத்தின் முக்கியத்துவத்தையும் பற்றி உரையாற்றினார். மாலா கோபால் அவருக்கு நினைவுப் பலகை ஒன்றை பரிசளித்தார்.



இவர்களை தொடர்ந்து, உயிர் அறக்கட்டளையின் முக்கிய அம்சங்களை கார்த்திக் விவரித்தார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக ஆசிரியர் தோமஸ் ஹிடோஷி ப்ருயிக்ஸ்மா, தமிழ் மொழியில் திறம்பட உரையாற்றியதோடு சில மாயக்கலைச் செய்கைகளையும் சுவாரசியமாகக் கலந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.



சமூக சேவையின் ஒருபகுதியாக, The Children's Assessment Center (CAC), Houston அமைப்புக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. பாலியல் துயரங்களுக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவாக செயல்படும் இந்த அமைப்பின் பணிகள் குறித்து, CAC பயிற்சியாளர் ஜாவன் டேட் விளக்கமளித்தார்.



இவ்விழாவின் சிறப்பம்சங்களில் ஒன்று குழந்தைகள் மய்யம் எனும் கேளிக்கை பகுதி அமைக்கப்பட்டது. மேலும், 'குறளுக்கொரு ஓவியம்' எனும் உலகளாவிய ஓவியப் போட்டியில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பலர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நடுவர்களின் பாராட்டையும் புகழையும் பெற்ற படைப்புகள் மூலம் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



இதனை தொடர்ந்து 'நன்றி சொல்லும் நல்லிசை' நிகழ்ச்சி மதன் அவர்களின் இசைக்குழுவின் பரவசமான பாடல்கள் அரங்கேறியது. உள்ளூர் திறமைகள் மற்றும் டிவி பாடல்கள், பங்கேற்பாளர்களை ஆடல் தளத்தில் கொண்டு சென்றது. விழாவை மேலும் மகிழ்வாக்க நகைச்சுவை நிகழ்ச்சி அரங்கேறி, பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.



இரவு விருந்து நிகழ்வின் மற்றொரு சிறப்பம்சமாக அமைந்தது. குமார்'ஸ் ஹூஸ்டன் உணவகத்தின் விருந்து அமர்க்களப்படுத்தியது. அதன் உரிமையாளருக்கு மாலா கோபால் 'அன்னமித்ரன்' என்ற பட்டத்தை வழங்கினார். மேலும், மல்லு கேஃபே ரேடியோ - USA என்ற ஊடக இணைப்பாளரும் நினைவுப் பலகையுடன் கௌரவிக்கப்பட்டனர்.



விழாவின் முடிவில், மாலா கோபால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தகவல்: நந்து ராதாகிருஷ்ணன், செயல்பாட்டு இயக்குனர், குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை



- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us