Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/தமிழ்ச் சங்கங்கள்/ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (2024- 25)

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (2024- 25)

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (2024- 25)

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (2024- 25)

ஜூலை 23, 2025


Google News
Latest Tamil News
ஆஸ்டின் தமிழ்ச்சங்கத்தின் 2024-- 2025 ஆம் ஆண்டுக்கான அலுவலகப் பொறுப்பாளர்கள்:

நிர்வாகக் குழு இணையதளம் : https://austintamilsangam.com/aboutus/ourteamats/



நிர்வாகக் குழு:

தலைவர்: அருணாசலம் அருணாசலம், துணைத் தலைவர்: மகாலட்சுமி ரமேஷ்பாபு, செயலாளர்: ஹரிஷ் ராஜகுமார், இணைச் செயலாளர்: சிதம்பரநாதன் அழகர், பொருளாளர்: மோகன் கோவிந்தராமானுஜம்



இயக்குநர் குழு உறுப்பினர்கள்: சக்திவேல் நடராஜன், சஞ்சய் பாலகிருஷ்ணன், சசிகலா சுப்ரமணியம்

நிகழ்ச்சிப் பொறுப்பாளர்கள்: நிகழ்ச்சி இயக்குநர்: மணிகண்டன் செல்லப்பாண்டியன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: கோகுல் சக்ரவர்த்தி விஜயமூர்த்தி, ஜெயஸ்ரீ கிரிஷ், விவேக் ஈஸ்வரன், சமூக ஊடகப் பொறுப்பாளர்:: பூர்ணிமா கிருஷ்ணமூர்த்தி



இந்த புதிய குழுவின் தலைமையில், ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் போற்றும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளும்.

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம்: தமிழ் கலாச்சாரத்தைப் போற்றும் ஒரு சங்கம்



ஆஸ்டின், டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரில், தமிழ் மொழி பேசும் சமூகத்தினரிடையே தமிழ் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நட்புறவை மேம்படுத்தும் நோக்குடன் 1991 ஆம் ஆண்டு ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் (ATS) நிறுவப்பட்டது. பேராசிரியர் முனைவர் திரு. கனகசபாபதி சதாசிவன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இலாப நோக்கற்ற அமைப்பு, அரசியல் மற்றும் மதச்சார்பற்ற தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம் இணையதளம்: https://austintamilsangam.com/home



சங்கத்தின் முக்கிய நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்:

ஆஸ்டின் தமிழ்ச் சங்கம், தமிழ் சமூகத்தின் நலனுக்காகப் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் பின்வருமாறு:



• ஆஸ்டின் வாழ் தமிழ் மக்களிடையே தமிழர் பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம், தமிழ் மொழியின் வளமை மற்றும் தமிழ் சான்றோர்களின் பெருமை குறித்த விடயங்களை முன்னெடுத்துச் செல்வது.

• தமிழ் இலக்கியங்கள் குறித்த ஆர்வத்தை மேம்படுத்துவது.



• வளர்ந்து வரும் தலைமுறைகளுக்கு நம் தமிழ் இனத்தின் பெருமைகளையும், தமிழ் மொழி குறித்த புரிதலையும், அவற்றைக் காக்க வேண்டிய கடமைகளையும் எடுத்துச் சொல்வதும், செயல்படுத்துவதும்.

• தமிழ் மக்களை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஒருங்கிணைப்பது.



• தமிழ் மக்களின் கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், நடனம், இசை போன்ற படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு தளம் அமைத்துக் கொடுப்பது.

• தமிழ்க் குடும்பங்களுக்குத் தக்க நேரத்தில் வேண்டிய உதவிகள் செய்தல்.



-- நமது செய்தியாளர் சிதம்பர்நாதன் அழகர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us