/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்
சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா கோலாகலம்

நவ 03, 2024

சிங்கப்பூர் ஆலயங்களில் ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து 8 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் நவம்பர் 2 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்றது. 11.15 மணிக்குக் காலை நிகழ்ச்சிகள் நிறைவு பெற்று இரவு 7 மணிக்கு ஏராளமான பக்தப் பெருமக்கள் பங்கேற்ற கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணமும் 7.30 மணிக்கு சத்ரு த்ருஷதி அர்ச்சனையும் மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சிகளாகத்தொடர்ந்தன.
8.15 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. நவம்பர் 8 ஆம் தேதி திருக்கல்யாண வைபவம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. சிங்கப்பூர்ப் பிரமுகர் ஷகி முகம்மது தீபாவளி ஒளியூட்டு விழாவைத் தொடக்கி வைத்து மின்னொளியில் பிரகாசித்துக் கொண்டுள்ள ஆலயத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா அருட்பிரகாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இப்பகுதியையே அருள்வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.
சுரேஷ்குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக்குழு சத்தீஷ் போன்றவர்களின் அர்ப்பணிப்புச் சேவையால் அருள் வெள்ளமும் ஒளி வெள்ளமும் சூழப் பிரகாசித்துக் கொண்டுள்ளது. திருக்கல்யாண வைபவம் ஈறாகப் பல்வேறு நிகழ்வுகளிலும் திரளாகப் பங்கேற்க ஆலயம் அன்புடன் அழைக்கிறது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்