Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சிங்கப்பூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சிங்கப்பூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

சிங்கப்பூரில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

நவ 29, 2024


Google News
Latest Tamil News
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் - சிதம்பரம் - கலைஞன் பதிப்பகம் சென்னை -அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம் - சிங்கப்பூர் ஆகியவற்றுடன் இணைந்து சிங்கப்பூர் கவிஞர் இயக்கமான கவிமாலை நவம்பர் 24 ஆம் தேதி ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விக்டோரியா சாலையிலுள்ள தேசிய நூலக 16 ஆவது தளத்தில் மிகச் சிறப்பானதொரு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.

சிங்கப்பூர் நாடாளு மன்ற மேனாள் உறுப்பினர் உலகத் தமிழ்மாமணி இரா.தினகரன் தொடக்கவுரை ஆற்றினார். நாடாளு மன்ற மேனாள் நியமன உறுப்பினர் அ.முஹம்மது இர்ஷாத் நிறைவுரையும் - அண்ணாமலைப் பல்கலைக் கழக முதுமுனைவர் அரங்க பாரி நோக்கவுரையும் ஆற்றினர். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மணிவண்ணன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் - உளவியல் - மருத்துவம் - அறம் என்ற பொருண்மைகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.



கவிமாலைக் காப்பாளர் புதுமைத்தேனீ கவிஞர் மா.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். முஹம்மது இர்ஷாத் ஆய்வுக் கட்டுரை படைத்தவர்கட்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். கலைஞன் பதிப்பக நிர்வாக இயக்குநர் நந்தன் மாசிலாமணி நன்றி நவில - கலை நிகழ்ச்சி - இரவு விருந்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. பெரும் ஆர்வத்துடன் பல நாடுகளிலிருந்து ஆய்வாளர்கள் பங்கு பெற்று நிகழ்வை வெற்றி பெறச் செய்தனர்.

நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us