/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாட்டில் உணவு விநியோகம்சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாட்டில் உணவு விநியோகம்
சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாட்டில் உணவு விநியோகம்
சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாட்டில் உணவு விநியோகம்
சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஏற்பாட்டில் உணவு விநியோகம்

ஊழியர் தங்கும் விடுதிகள், வழிபாட்டுத் தலங்கள், பொழுதுபோக்கு நிலையம் என பல இடங்களில் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. காலை, மதிய, இரவு வேளை உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு முக்கிய அங்கம் வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஏற்பாடு அமைந்தது.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்டு ஊழியர்களுடன் அமர்ந்து உணவுண்டார். “சிங்கப்பூரின் வளர்ச்சிக்காக முக்கியப் பங்காற்றிய வெளிநாட்டு ஊழியர்களின் தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டும். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இக்கொண்டாட்டம் அமைகிறது,” என்றார் டாக்டர் டான்.
கல்வி நிலையங்கள் போன்ற வெவ்வேறு பின்னணியை சேர்ந்த 160க்கும் மேலான தொண்டூழியர்கள் உணவு விநியோகத்தில் பங்கெடுத்தனர். “ஒவ்வோர் உணவகமும் தங்களால் முடிந்த அளவுக்கு உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தன. விதிமுறைகளின்படி, உணவுப் பொட்டலங்களை நான்கு மணி நேரத்திற்குள் இடத்தைச் சென்றடைய வேண்டும். அதன்படி, ஏற்பாடுகள் அனைத்தும் சுமுகமாக நடந்து முடிந்தன,” என்றார் சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.மகேந்திரன்.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்