/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/புலம்பெயர்ந்த தமிழர் நலன் - துணைச் சட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்புலம்பெயர்ந்த தமிழர் நலன் - துணைச் சட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
புலம்பெயர்ந்த தமிழர் நலன் - துணைச் சட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
புலம்பெயர்ந்த தமிழர் நலன் - துணைச் சட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்
புலம்பெயர்ந்த தமிழர் நலன் - துணைச் சட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்

இந்த சட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், ஆணையரகம், பாதிக்கப்பட்ட தமிழ் நபர்கள், இந்திய தூதரகம் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படுவார்கள். மேலும்,வழக்குகள் திறமையாகவும் திறம்படவும் கையாளப்படுவது உறுதி செய்வார்கள்.
சவூதி அரேபியாவிற்கு, சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட் ஒரு சட்ட துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்களுடன் நெருக்கமாகப் பணியாற்றி, பல்வேறு சட்ட விவகாரங்களில் உதவிகளையும் ஆதரவையும் வழங்கி பாராட்டத்தக்க சாதனை படைத்தவர்.
டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட்க்கு தனது புதிய பொறுப்பில் தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குமாறு புலம்பெயர் தமிழர்கள் நலன் மறுவாழ்வு ஆணையர் பி. கிருஷ்ணமூர்த்தி இந்திய தூதரகத்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
டாக்டர் சந்தோஷ் பிரேம் வின்ஃப்ரெட் சவுதியில் வாழும் தமிழ்நாட்டு மக்களுடன் நெருக்கமானவராகவும், பல்வேறு சட்ட உதவிகளை செய்து பாராட்டுக்களை பெற்றவராவார். அவருடைய பணி மேலும் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
- நமது செய்தியாளர் சிராஜ்