/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/உம் அல் குவைனில் மரக்கன்றுகள் நடும் பணிஉம் அல் குவைனில் மரக்கன்றுகள் நடும் பணி
உம் அல் குவைனில் மரக்கன்றுகள் நடும் பணி
உம் அல் குவைனில் மரக்கன்றுகள் நடும் பணி
உம் அல் குவைனில் மரக்கன்றுகள் நடும் பணி
ஏப் 25, 2025

உம் அல் குவைன்: ஐக்கிய அரபு அமீரகத்தின் உம் அல் குவைன் நகரில் உள்ள கடற்கரை பகுதியில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் மாங்குரோவ் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டது. உலக பூமி தினத்தையொட்டி இந்த சிறப்பு நிகழ்ச்சி உம் அல் குவைன் மாநகராட்சியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவர் ஹபிபா அல் மராசி உள்ளிட்ட அதிகாரிகள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர் என பலரும் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா