Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அன்னை தமிழ் மன்றம் சார்பில் மரம் நடு விழா

அன்னை தமிழ் மன்றம் சார்பில் மரம் நடு விழா

அன்னை தமிழ் மன்றம் சார்பில் மரம் நடு விழா

அன்னை தமிழ் மன்றம் சார்பில் மரம் நடு விழா

ஜூன் 05, 2025


Google News
Latest Tamil News

பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வரும் நமது அன்னை தமிழ் மன்றம், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு Capital Governorate மற்றும் Gulf Fencing and Specialist Surfacing(GFSS) உடன் இணைந்து மரம் நடும் நிகழ்வினை மே 30, அன்று சிட்டி பீச்சில் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் பஹ்ரைன் அரசின் யூசுப் லோரி (Director Of Information and Followup, Capital Governorate), புகழேந்தி(General Manager, GFSS) மற்றும் பல முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.



உடற்பயிற்சி மற்றும் நடனப் பயிற்சியாளர் எபின் தாமஸ் உடல்நலன் குறித்த சிறப்பு உரையினை வழங்கினார். அன்னை தமிழ் மன்றத்தின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில்.G.K மற்றும் அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களைக் கௌரவித்தனர்.



நிகழ்வின் தொடக்கமாக வினோத்குமார் மணிவண்ணன் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு சிறப்பு உரையினை வழங்கினார். மரம் நடும் நிகழ்வினை முன்னிட்டு அன்னை தமிழ் மன்றம் ஏற்பாடு செய்திருந்த போஸ்டர் வரைதல் போட்டி மற்றும் வலைதள காணொளி போட்டிகளில் பங்கு கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் லக்ஷ்மி நாராயணன் நடுவராக இருந்து பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.



சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரங்களை நட்டு இயற்கையைக் காக்கும் தங்களின் சமூக பணியைத் தொடங்கினர். இந்நிகச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து அருண் வேண்டிய பணிகளைச் சிறப்பாய் வடிவமைத்தது மரம் நடும் நிகழ்ச்சி வெற்றியடைய பெரிதும் உதவியது. இறுதியாக அன்னை தமிழ் மன்றத்தின் உள்துறைக் கணக்காளர் அப்துல் பாசித் நன்றியுரை வழங்கினார்.



மரம் நடும் நிகழ்ச்சி வெற்றியடைய இடமளித்து உதவிய City Beach நிர்வாகத்திற்கும் இரவு பகல் பாராமல் உழைத்த அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகளுக்கும், மங்கையர் குழு உறுப்பினர்களும், தன்னார்வலர்களுக்கும்,கொடையாளர்களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் அன்னை தமிழ் மன்றம் தங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.



- நமது செய்தியளர் பெ. கார்த்திகேயன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us