Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/சலாலாவில் தமிழக இளைஞர்கள்

சலாலாவில் தமிழக இளைஞர்கள்

சலாலாவில் தமிழக இளைஞர்கள்

சலாலாவில் தமிழக இளைஞர்கள்

ஆக 06, 2025


Google News
Latest Tamil News

சலாலா : ஓமன் நாட்டின் சலாலாவில் தற்போது மழை சாரலுடன் கூடிய இதமான காலநிலை நிலவி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட பல்வேறு வளைகுடா நாடுகளில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் ஓமன் நாட்டின் சலாலா பகுதியில் மட்டும் தற்போது கரீஃப் சீசன் எனப்படும் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதிக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.



துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கௌஸ் தலைமையிலான குழுவினர் சலாலாவுக்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியில் பெய்து வரும் மழை சாரலை ரசித்து மகிழ்ந்தனர். மேலும் இளநீர் வாங்கி சாப்பிட்டனர். நபி அய்யூப், நபி இம்ரான், இந்திய மன்னர் சேரமான் பெருமான் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளிட்ட பல்வேறு அடக்கத்தலங்கள் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட்டனர்.



இந்த பயணம் தங்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.



- நமது செய்தியாளர் காஹிலா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us