Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாய் நூலகத்துக்கு தனது நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழக எழுத்தாளர்

துபாய் நூலகத்துக்கு தனது நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழக எழுத்தாளர்

துபாய் நூலகத்துக்கு தனது நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழக எழுத்தாளர்

துபாய் நூலகத்துக்கு தனது நூல்களை அன்பளிப்பாக வழங்கிய தமிழக எழுத்தாளர்

ஆக 12, 2024


Google News
Latest Tamil News
துபாய் : துபாய் நகரின் பிரமாண்ட நூலகமான முஹம்மத் பின் ராஷித் நூலகத்துக்கு தமிழக வரலாற்றாய்வாளர் கீழக்கரை ச.சி.நெ. அப்துல் றஸாக் தான் எழுதிய ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூவின் வரலாறின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உள்ளிட்ட நூல்களை நூலக அதிகாரி முஹம்மதுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்.

அப்போது பேசிய வரலாற்றாய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக், துபாய் நகரின் ஆட்சியாளர் ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் இத்தகைய பிரமாண்ட நூலகத்தை ஏற்படுத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதில் தமிழ் நூல்களும் இடம் பெற வாய்ப்பளித்திருப்பதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மேலும் மொழி தோட்டம் என்ற இடத்தை ஏற்படுத்தி அதில் ஆட்சியாளரின் பொன்மொழிகள் உலகின் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியும் இடம் பெற செய்திருப்பதன் மூலம் தமிழ் மொழிக்கு துபாய் நகரம் அளித்து வரும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ள முடிகிறது என்றார்.



இந்த நிகழ்வில் அமீரக ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், கீழக்கரை முஹம்மது யாசின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us