/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருதுதுபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது
துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது
துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது
துபாயில் தமிழக மாணவி அனன்யா மணிகண்டனுக்கு வீர் பால்திவஸ் வீரதீர விருது

குரு கோவிந்த் சிங் மகன்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், அனன்யா , தனது துணிச்சல், சிறந்த பேச்சு திறன், படைப்பாற்றல், கல்வி, கலை, நாடகங்களில் சாதனை, மற்றும் சுற்றுச்சூழல், மனநல விழிப்புணர்விற்கான சமூகத் திட்டங்களில் மகத்தான பங்களிப்புக்காக பாராட்டப்பட்டார்.
ராஜ்ய சபா உறுப்பினரும் இந்திய சிறுபான்மை சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளருமான சத்னாம் சிங் சந்து, துணை தூதரக அதிகாரி யதின் படேல், துணைத் தூதரக அதிகாரி சுரேந்தர் சிங் கண்டாரி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். மேலும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி, துணிவு, ஒற்றுமை மற்றும் இளைஞர்களின் தியாகத்தின் பாரம்பரியத்தைப் போற்றுவதாக அமைந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா