/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாய் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவி துபாய் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவி
துபாய் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவி
துபாய் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவி
துபாய் பல்கலைக்கழகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவி
டிச 13, 2024

துபாய்: துபாய் நகரில் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்பில் தகவல் தொடர்புத் துறையில் தமிழக மாணவி ரக்ஷனா சிறப்பிடம் பெற்றார். அவருக்கு பல்கலைக்கழக அதிகாரி பட்டம் வழங்கி கவுரவித்தார்.
இவர் அதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் மற்றும் ஆராய்ச்சித்துறை தலைவராக இருந்து வரும் பேராசிரியர் முனைவர் சித்திரை பொன் செல்வன் மகளாவார். இளநிலை படிப்பில் சிறப்பிடம் பெற்ற ரக்ஷனாவுக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
- நமது செய்தியாளர் காஹிலா