ஜூன் 01, 2025

மனாமா: லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கம் சார்பாக, ஜுஃபைர், அத்லியா மற்றும் உம் அல் ஹசம் பகுதியில் உள்ள கட்டுமானத் தளத் தொழிலாளர்களுக்கு பஹ்ரைன் பொதுப்பேரூந்து பயண அட்டைகள், தொப்பிகள், பழங்கள், பழச்சாறு மற்றும் தண்ணீர் குப்பிகளை விநியோகித்தது.
லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கத்தின், ' வெப்பத்தை வெல்லுங்கள் -2025 ' முயற்சியின் ஒரு பகுதியான இந்த முயற்சி கோடை இறுதி வரை தொடரும் என லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் பிரதிநிதிகள் சையத் ஹனீப் மற்றும் ஃபசல் ரஹ்மான் ஆகியோர் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா