/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தாரில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் கத்தாரில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
கத்தாரில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
கத்தாரில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
கத்தாரில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்
செப் 12, 2024

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் இந்திய தூதரகம், இந்திய சமூக நல அமைப்புடன் இணைந்து சிறப்பு விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முகாமுக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். அப்போது கத்தார் நாட்டில் இருந்து வரும் சட்ட திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார். குறிப்பாக போதைப் பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பான குற்ற செயல்களுக்கு கடுமையான தண்டனை இருந்து வருகிறது. எனவே இந்திய சமூகத்தினர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடாத வகையில் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் இந்திய சமூக நல அமைப்புகளின் பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்களும் நேரடியாகவும், காணொலி வழியாகவும் பங்கேற்றனர். அவர்கள் சமூகத்தில் சட்ட, திட்டங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்திய தூதர் வேண்டுகோள் விடுத்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா