/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ரியாத் தமிழ்ச் சங்கம் 2025-_2026க்கான புதிய உயர்நிலைக்குழுரியாத் தமிழ்ச் சங்கம் 2025-_2026க்கான புதிய உயர்நிலைக்குழு
ரியாத் தமிழ்ச் சங்கம் 2025-_2026க்கான புதிய உயர்நிலைக்குழு
ரியாத் தமிழ்ச் சங்கம் 2025-_2026க்கான புதிய உயர்நிலைக்குழு
ரியாத் தமிழ்ச் சங்கம் 2025-_2026க்கான புதிய உயர்நிலைக்குழு

தமிழின் வளத்திற்காகவும், தமிழர் நலத்திற்காகவும் கடந்த 21 வருடங்களாக சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் சிறப்பாகச் செயற்பட்டு வரும் ரியாத் தமிழ்ச் சங்கம் 2025_-2026க்கான புதிய உயர்நிலைக்குழுவைத் தேர்ந்தெடுத்துள்ளது.
அஹமது இம்தியாஸ் தலைவராகவும், கபீர் VP செயலாளராகவும், ஆரோக்கிய தாஸ் துணைத் தலைவராகவும், சந்திரசேகர் பொருளாளராகவும், மாதவன் இணைச் செயலாளராகவும் பொறுப்பு ஏற்றுள்ளார்கள்.
ரியாத் மாநகரில் தமிழர்தம் பண்பாட்டை முன்னிறுத்தவும், சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளுடன் தமிழை மேலோங்க செய்யவும், வேலைவாய்ப்பு மூலம் தமிழ்ச் சமூகம் முன்னேற வழிவகை செய்யவும், தமிழர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கவும், பத்திரிகை துறையின் மூலம் கதை, கவிதை, கட்டுரை உள்ளிட்ட எழுத்துக்களை அச்சேற்றவும் தனித்தனி குழு அமைத்துச் செயற்பட இருக்கிறார்கள்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இந்தப் புதிய மேலாண்மைக் குழுவினர் தமிழ் நெஞ்சங்களின் தீரா ஒத்துழைப்பைக் கேட்டுக்கொள்வதுடன் தொடர் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கின்றனர்.
- தினமலர் வாசகர் அஹமது இம்தியாஸ் தலைவர், ரியாத் தமிழ்ச் சங்கம்