/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தார் வாழ் கன்னத்தோட்டை நலன்புரி சங்க கிரிக்கெட் சுற்று போட்டிகத்தார் வாழ் கன்னத்தோட்டை நலன்புரி சங்க கிரிக்கெட் சுற்று போட்டி
கத்தார் வாழ் கன்னத்தோட்டை நலன்புரி சங்க கிரிக்கெட் சுற்று போட்டி
கத்தார் வாழ் கன்னத்தோட்டை நலன்புரி சங்க கிரிக்கெட் சுற்று போட்டி
கத்தார் வாழ் கன்னத்தோட்டை நலன்புரி சங்க கிரிக்கெட் சுற்று போட்டி
ஜூன் 08, 2024

கத்தார் வாழ் கன்னத்தோட்டை நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்று போட்டி வியாழக்கிழமை (06) ஓல்ட் ஐடியல் இந்தியன் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. போட்டி கேகாலை மாவட்டத்தின் கன்னத்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த கத்தார் வாழ் இளைஞர்களால் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு நடாத்தப்பட்டது.
கிரிக்கெட் போட்டியில் வாக்ரா வாரியர்ஸ் அணியும், தோஹா ஸ்டிக்கர்ஸ் அணியும் மோதிய இறுதிப் போட்டியில் வாக்ரா வாரியர்ஸ் அணி சாம்பியனானது. மேலும், இக்கிரிக்கெட் போட்டியில் தொடரின் நாயகனாகவும், ஆட்ட நாயகனாகவும் அனஸ் சல்மான், சிறந்த பேட்ஸ்மேனாக முகமது அகீல், சிறந்த பந்து வீச்சாளராக முகமது நபீல், சிறந்த பீல்டராக மொஹமட் ரிசான் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிட்டத்தக்கதாகும்.
- தினமலர் வாசகர் ஜே.எம்.பாஸித்