/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடல்பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடல்
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடல்
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடல்
பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபிய தமிழ் சமூகத்தினருடன் கலந்துரையாடல்

ஒவ்வொரு மாநிலத்தவருக்கும் அமைக்கப்பட்டிருந்த தனி அரங்கில் சவுதி அரேபியாவின் தமிழ்ச் சமுகத்தின் சார்பாக பதினேழு பிரதிநிதிகள் கலந்து கொண்டு பிரதமருடன் கலந்துரையாடினர்.
தமிழர்களின் அரங்கில் நுழைந்தவுடன், அனைவரும் வணக்கம் கூறி வரவேற்றனர். அதுசமயம் தமிழ் மொழியையும் திருக்குறளையும் உலகமெங்கும் கொண்டு செல்ல முயற்சி எடுக்கும் பிரதமருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர். அது என்னுடைய கடமை என்று பதிலளித்த பிரதமர், பிரத்யேக திருக்குறள் பயிற்சி மையங்கள் பலநாடுகளிலும் அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
சவூதிஅரேபியாவில் வசிக்கும் மாணவ மாணவியருக்கு இங்குள்ள தமிழ்ச் சங்கங்கள் தமிழை பயிற்றுவிக்க பல்வேறு முயற்சிகளும் எடுக்கிறோம் என்று தெரிவித்த பொழுது அதனை வெகுவாக பாராட்டிய பிரதமர் தமிழ் மொழி உலகின் பழமையான மொழி என்றும் அந்த மொழியை நாம் பெற்றிருப்பதில் இந்தியர் அனைவரும் பெருமையும் கர்வமும் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முனைவர் ஹேமலதா மகாலிங்கம், மருத்துவர் ஜெயஸ்ரீ மூர்த்தி, முனைவர் தங்கம் மகேந்திரன், சத்யா தங்கம், மருத்துவர் பாத்திமா ரிஸ்வானா, கதிஜா இம்தியாஸ், அஹமது இம்தியாஸ், இஜாஸ் அஹமது, முனைவர் மகேந்திரன், செந்தில் ராஜா, மூர்த்தி, முனைவர் முஹைதீன் சலீம், இராமானுஜம், பொறியாளர் காஜா மைதீன், ரமணன், ஜாவித் அகமது, சாரங்கபாணி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரதமருடான கலந்துரையாடலுக்குப் பின்னர், ஊடகத்துறையினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் அஹமது இம்தியாஸ், முனைவர் முஹைதீன் சலீம் மற்றும் பொறியாளர் காஜா மைதீன் ஆகியோர் பிரதமரின் சந்திப்பு பற்றி பேட்டியளித்தனர்.
- தினமலர் வாசகர் அஹமது இம்தியாஸ்