Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அயலக தமிழர் அடையாள அட்டை: இந்தியன்ஸ்வெல்ஃபர் ஃபோரம் சாதனை

அயலக தமிழர் அடையாள அட்டை: இந்தியன்ஸ்வெல்ஃபர் ஃபோரம் சாதனை

அயலக தமிழர் அடையாள அட்டை: இந்தியன்ஸ்வெல்ஃபர் ஃபோரம் சாதனை

அயலக தமிழர் அடையாள அட்டை: இந்தியன்ஸ்வெல்ஃபர் ஃபோரம் சாதனை

ஆக 11, 2024


Google News
Latest Tamil News
சவுதி அரேபியா முழுவதும் ஒரே நாளில் பல மண்டலங்களில் அயலக தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமை நடத்தி சாதனை படைத்துள்ளது இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்.

அமைப்பாய் திரண்டால் அனைத்தும் சாத்தியம் என்பதை மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்..



தலைநகர் ரியாத்தில் ரியாத் மண்டல அலுவலகத்தில் முதல் முகாமை நடத்தி அதனைத் தொடர்ந்து தொலைபேசி வழியாக பல்வேறு மக்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த வியாழன் வெள்ளி சனி என மூன்று நாட்களிலும் நியூ செனையா கிளையின் சார்பாக கேம்ப கேம்ப் ஆக நேரடியாக சென்று நூற்றுக்கணக்கான தமிழர்களின் அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு வழி வகுத்துக் கொண்டுள்ளது இந்தியன் வெல்ஃபர் பாரம் ரியாத் மத்திய மண்டலம் .



சவுதி அரேபியாவின் விவசாய தலைநகரமாக விளங்கும் வடக்கு அல் கசிம் மண்டலம் சார்பாக அயலகத் தமிழர் அடையாள அட்டையை அதிகமாக பெற்றுக் கொடுத்த மண்டலம் எனும் பெயர் வாங்கும் வகையில் அனைத்து இஸ்லாமிய அழைப்பு மையங்களிலும் கேம்ப்களிலும் தனிநபர் அறைகளிலும் தமிழர்களை அழைத்து இதுவரை ஐந்துக்கும் மேற்பட்ட முகாம்களை நடத்தி மிக குறைவான சம்பளங்களிலே வேலை செய்யும் இந்த அயலகத் தமிழர்களின் திட்டத்தால் அதிக பயன்பெறும் மக்களுக்கு அடையாள அட்டையை பெற்றுக் கொடுத்து கொண்டுள்ளது வடக்கு மண்டல இந்தியன்ஸ் வெல்பார் ஃபோரம்..



சவுதி அரேபியாவின் இரண்டாம் தலைநகரான ஜித்தாவில் மேற்கு மண்டலம் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம் சார்பாக மூன்றுக்கும் மேற்பட்ட முகாம்களை அதிக மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மக்கா உள்ளிட்ட நகரங்களில் ஹோட்டல்களிலும் மருத்துவமனைகளிலும் கேம்புகளில் நடத்தி அயலகத் தமிழர் நலவாரிய அடையாள அட்டை பெற்றுக் கொடுத்து வருகிறது மேற்கு மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் பாரம்.



சவுதி அரேபியாவின் பொருளாதார கேந்திரமாய் விளங்கும் யான்பு மண்டலம் சார்பாக தமிழர்களை அழைத்து அயலக அடையாள அட்டை பெற்றுக் கொடுத்து தொடர்ச்சியாக கட்டணமில்லா வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் முகாம்களை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டுள்ளது யான்பு மண்டல இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்.



வரலாற்று சிறப்புமிக்க புனித மண்ணான மதினாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியன்ஸ் வெல்பர் பாரம் அயலகத் தமிழர் அடையாள அட்டை பதிவு செய்யும் முகாமை நடத்தி களமாடி உள்ளது. மிகுந்த நெருக்கடி மிகுந்த அப்பெருநகரில் ஒரு வணிக நிறுவனத்தில் வைத்து மிகச் சிறப்பான முகாமை நடத்தி புனித மண்ணில் பணியாற்றும் பல தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டை பெறுவதிலே மிகச் சிறப்பான பணியை செய்திருக்கிறது இந்தியன்ஸ் வெல்பர் பாரம் மதீனா அமைப்புக்குழு.



காதும் காதும் வைத்தாற் போல் பல்வேறுபட்ட சமூகப் பணியை சத்தம் இல்லாமல் செய்யும் சவுதி அரேபியாவின் மிக முக்கிய பொருளாதாரம் கேந்திரமான தமாம் கிழக்கு மண்டலம் சார்பாக அங்கு இருக்கும் தமிழர்களுக்கு அயலகத் தமிழர் அடையாள அட்டையை பெறுவதற்கான வழிகாட்டுதல்களையும் கொடுத்து சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறது கிழக்கு மண்டல இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரம்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us