Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத், அப்பாஸியா அஸ்பயர் இந்தியன் பள்ளியில் மே தின கொண்டாட்டம்

குவைத், அப்பாஸியா அஸ்பயர் இந்தியன் பள்ளியில் மே தின கொண்டாட்டம்

குவைத், அப்பாஸியா அஸ்பயர் இந்தியன் பள்ளியில் மே தின கொண்டாட்டம்

குவைத், அப்பாஸியா அஸ்பயர் இந்தியன் பள்ளியில் மே தின கொண்டாட்டம்

மே 06, 2025


Google News
Latest Tamil News
குவைத் அப்பாஸிய அஸ்பயர் இந்தியன் பள்ளியில் பணிபுரியும் Al Maha Star Co ஓட்டுனர்களுக்கு மே தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, சிறப்பு விருந்தினர்களாக அஸ்பயர் பள்ளியின் முதல்வர் Ms Geetika Ahuja, Facility director Mr. Toby, Transport Co-Ordinator Mr. Anis, and Indian Leaners Own Academy Administrator Mr. Mohamed Shibin கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் அஸ்பயர் பள்ளியின் முதல்வர் Ms Geetika Ahuja, ஓட்டுனர்களின் கடின உழைப்பை பாராட்டி பேசியதோடு பள்ளிக்கு அவர்களின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களின் பொறுப்பு குறித்தும் உணர்த்தி விரிவாக பேசியிருந்தார், முன்னதாக மகா ஸ்டார் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் டாக்டர் சாமி P வெங்கட் வரவேற்று பேசியதோடு ஓட்டுனர்களுக்கு மே தின வாழ்த்துக்களை பகிர்ந்து அனைவரையும் பாராட்டினார்.



நிகழ்ச்சியில் பிள்ளை நிலா ஆர்கெஸ்ட்ரா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் தெலுகு என பல்வேறு பாடல்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் பாடப்பட்டது, ஓட்டுனர்கள் மற்றும் வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் ரசித்து நடனமாடி கொண்டாடினர். நன்றியுரை ஸ்ரீதர் வழங்கினார், நிகழ்ச்சி ஏற்பாட்டினை புருஷோத்தமன் செய்திருந்தார், அறுசுவை இரவு விருந்தோடு விழா இனிதே நிறைவடைந்தது.



- நமது செய்தியாளர் எஸ்.செல்லதுரை







      Our Apps Available On




      Dinamalar

      Follow us