Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கிய மனிதருக்கு கத்தாரில் கௌரவம்

மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கிய மனிதருக்கு கத்தாரில் கௌரவம்

மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கிய மனிதருக்கு கத்தாரில் கௌரவம்

மாணவர்களின் மருத்துவ கனவுகளை நனவாக்கிய மனிதருக்கு கத்தாரில் கௌரவம்

டிச 04, 2024


Google News
Latest Tamil News
2024 மருத்துவப் படிப்பைத் தொடரும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மாணவர்கள் ஹபீப் ரஹுமானை சிறப்பான முறையில் கௌரவித்தனர். கத்தாரின் தோகாவில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற்றது.

கடந்த 6 ஆண்டுகளில் 323 மாணவர்கள் மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கு ஹபீப் ரஹுமான் முக்கிய பங்கு வகித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் மட்டும் அவரது வழிகாட்டுதலின் கீழ் 80 மாணவர்கள் வெற்றிகரமாக மருத்துவப் படிப்பினை கற்க சேர்ந்துள்ளனர்.



பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கத்தாரில் வசிக்கும்போது, சிலர் UAE, KSA, பஹ்ரைன், சிங்கப்பூர், குவைத் மற்றும் இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



மேலும் டி.பி.எஸ்-எம்.ஐ.எஸ் பாடசாலை மற்றும் புனே பல்கலைக்கழகம் தலைவர் யாசீர் நைனார், கத்தார் தமிழர் சங்கம் ஆலோசனை குழு தலைவர் பாபுராஜ் இரண்டு முக்கிய விருந்தினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்தனர்.



இவ்விழாவிற்கு வருகையளித்த சிறப்பு விருந்தினர்கள் ஹபீப் ரஹுமான் தன்னலம் பாராது மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பைத் தொடர்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டமையை சிறப்புறக் கூறி கௌரவித்தார்கள்.



மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராவதற்கு உதவுவது முதல், கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை செயல்முறை மூலம் அவர்களை வழிநடாத்துவது போன்ற சிறப்பான திட்டங்களை வெற்றிகரமாக செய்வதனைப் பாராட்டி 2024 ஆம் ஆண்டு குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.



மாணவர்கள், பெற்றோர்கள், விருந்தினர்கள் மற்றும் பலர் முன்னிலையில் ஹபீப் ரஹுமான் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.



- தினமலர் வாசகர் முகமது பாசித்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us